ஒரு வழியா தீர்ந்தது பிரச்சனை..அமலா பாலின் ‘அதோ அந்த பறவை போல‘ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : நடிகை அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அமலா பால் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். வித்தியாசமான கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடிக்க முடிவு செய்த அமலா பால் ஆடை படத்தில் நடித்தார்.

இந்த படத்திற்காக பல காட்சிகளில் ஆடை இல்லாமல் நடித்ததால் பல தரப்பு விமர்சனங்களை எதிர்கொண்டார்.

நடிகை அமலா பால்

நடிகை அமலா பால்

நடிகை அமலா பால் தனுஷ், விஜய், ஜெயம்ரவி, சித்தார் ஆகியோருடன் இணைந்து நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களிலும் பிசியாக நடித்து வந்தார் அமலா பால். நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அமலா பால் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கினார். இதையடுத்து, தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தில் அவரே நடித்துள்ளார்.

கடாவர்

கடாவர்

மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இப்படத்திற்கு கடாவர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன், பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ் நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். த்ரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ள இத்திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது.

அதோ அந்த பறவை போல

அதோ அந்த பறவை போல

இந்நிலையில், அமலா பால் லீட் ரோலில் நடித்து நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள இத்திரைப்படம் ஆகஸ்ட் 26ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. செஞ்சுரி ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், நடுகாட்டில் சிக்கிக் கொள்ளும் பெண், அதிலிருந்து எப்படித் தப்பிக்கிறாள் என்பதை அட்வென்ச்சர் த்ரில்லர் கதையாக இயக்குநர் கொடுத்து இருக்கிறார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

இப்படத்தின் படப்பிடிப்பு வயநாடு மற்றும் கேரளாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை காடுகளில் படமாக்கப்பட்டது. இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார் மற்றும் சுப்ரீம் சுந்தர் ஆகியோர் நடித்துள்ளனர். பல வருடங்களுக்கு பிறகு அமலாபாலின் படம் திரையரங்கில் வெளியாக உள்ளதால் அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X