Just In
- 8 hrs ago
அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி!
- 8 hrs ago
ரஜினி என் கூட பேசாட்டியும் பரவாயில்ல.. தர்பார் மேடையில் படுஆவேசமாக அரசியல் பேசிய நடிகர் லாரன்ஸ்!
- 9 hrs ago
ஆதித்ய அருணாச்சலம் பேருக்கு பின்னாடி இப்படி ஒரு மேட்டரா? சீக்ரெட்டை போட்டுடை ஏஆர் முருகதாஸ்!
- 10 hrs ago
தை மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடும்.. ரஜினியே சொல்லிட்டாரு.. தர்பார் மேடையில் சொன்ன பிரபல நடிகர்!
Don't Miss!
- News
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிவசேனா ஆதரவு?
- Technology
டிசம்பர் 17: இந்தியாவில் ரியல்மி எக்ஸ்டி 730ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Lifestyle
இந்த ராசிக்காரங்க இன்னிக்கு ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...
- Sports
9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது? பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி!
- Finance
சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா..! கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..!
- Automobiles
பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீண்டும் மிரட்டும் அமலா பால்.. அதோ அந்த பறவை போல டீசர் ரிலீஸ்!
சென்னை: ஆடை படத்தை தொடர்ந்து அமலா பாலின் மிரட்டல் நடிப்பில் 'அதோ அந்த பறவை' படம் உருவாகியுள்ளது. தற்போது அந்த படத்தின் டீசரை மோகன் லால் மற்றும் அனிருத் வெளியிட்டனர்.
காடுகளை சுற்றி நடக்கும் கதையாக அமலா பாலின் அதோ அந்த பறவை போல வெளியாகியுள்ளது.
வினோத் கே.ஆர். இயக்கியுள்ள இந்த படத்தில் அமலா பாலுடன் ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் சமீர் கோச்சார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஆடை
ரத்னகுமார் இயக்கத்தில் பொதுமக்களிடம் பிரான்க் செய்யக் கூடாது என்ற நல்ல கருத்தை உள்ளடக்கி வெளியான அமலா பாலின் ஆடை படம் விமர்சகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான விருது, இந்த படத்தில் நடித்த அமலா பாலுக்கு கிடைக்கும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆடையின்றி அமலா பால் நடித்ததை இந்தியளவில் பல சினிமா பிரபலங்களும் வாய் பிளந்து பாராட்டினர்.

நெட்பிளிக்ஸ்
ஆடை படத்தில் நடித்த அமலா பால், தெலுங்கில் வெளியாகும் லஸ்ட் ஸ்டோரிஸ் கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் தொடரில் கியாரா அத்வானி நடித்த கதாபாத்திரத்தில் அமலா பால் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
|
அனிருத் மோகன் லால்
அமலா பால் சோலோ ஹீரோயினாக நடித்துள்ள அதோ அந்த பறவை போல டீசரை சற்றுமுன் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன் லால் மற்றும் தமிழகத்தின் ராக்ஸ்டார் அனிருத் ஆகியோர் தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.
|
எப்படி இருக்கு
வினோத் கே.ஆர். இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள அதோ அந்த பறவை போல டீசர் 1 நிமிடம் 26 நொடிகள் மிகவும் க்ரிப்பாக பல ஆக்ஷன் காட்சிகளுடன் நகர்கிறது. அமலா பாலை காட்டில் யாரோ பலவந்த படுத்துவது போன்றும், அவரது ஆடைகளை அகற்றுவது போன்றும், டீசரின் இறுதியில் அவரை சுட்டு புதைக்குழியில் தள்ள, அங்கே ஒரு கை அவருக்கு கை கொடுக்கிறது. அந்த கை யாருடைய கை என்றால் அதுவும் அமலா பாலின் கை, இப்படி பல சுவாரஸ்ய காட்சிகளுடன் அதோ அந்த பறவை போல டீசர் எதிர்பார்ப்பை தூண்டுகிறது.