அதிதி ராவ் யாருக்கு ரோஸ் கொடுத்து இருக்காரு பாருங்க.. பாவம் சித்தார்த்.. கமெண்ட் வேற போட்டுருக்காரு!

சென்னை: காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த நடிகை அதிதி ராவ் பிரபல நடிகர் ஒருவருக்கு ரோஸ் கொடுத்து ப்ரபோஸ் செய்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரும் அடிக்கடி ஒன்றாக டேட்டிங் செல்லும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

ஆனால், காதலர் தினத்தை முன்னிட்டு அதிதி ராவ் இன்னொரு பிரபல நடிகருக்கு ரோஸ் கொடுத்திருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

அழகு அதிதி

அழகு அதிதி


இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கார்த்தியின் காற்று வெளியிடை படத்தில் காஷ்மீர் பனியில் இருந்து அழகாக அதிதி ராவ் எட்டிப் பார்க்கும் காட்சிகளை பார்த்ததுமே ரசிகர்கள் அவரிடம் மேரி மீ என பாட ஆரம்பித்து விட்டனர். செக்கச் சிவந்த வானம், ஹே சினாமிகா என தொடர்ந்து தனது லவ்லியான நடிப்பால் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அதிதி ராவ்.

சித்தார்த் உடன் காதல்

சித்தார்த் உடன் காதல்

பாய்ஸ், தீயா வேலை செய்யணும் குமார், ஜில் ஜங் ஜக் என ஏகப்பட்ட வித்தியாசமான படங்களில் நடித்துள்ள நடிகர் சித்தார்த் அடுத்ததாக கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை அதிதி ராவ் மற்றும் சித்தார்த் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரின்சஸ் ஆஃப் ஹார்ட்டுக்கு ஹேப்பி பர்த்டே என கடந்த ஆண்டு அதிதியின் பிறந்தநாளுக்கு சித்தார்த் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

தர்மேந்திராவுக்கு ரோஸ் கொடுத்த அதிதி

தர்மேந்திராவுக்கு ரோஸ் கொடுத்த அதிதி

காதலர் தினத்தை முன்னிட்டு சித்தார்த்துக்கு ரோஸ் கொடுப்பார் அதிதி என பார்த்தால், பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு ரோஸ் கொடுத்து காதலர் தின வாழ்த்துக்களை நடிகை அதிதி ராவ் கூறியுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

தர்மேந்திரா

தர்மேந்திரா

பழம்பெரும் பாலிவுட் நடிகரான தர்மேந்திரா விரைவில் Rocky Aur Rani Ki Prem Kahani படத்தின் மூலம் மீண்டும் பாலிவுட் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்த உள்ளார். இந்நிலையில், அந்த படத்தில் நடித்துள்ள நடிகை அதிதி ராவ் மூத்த நடிகருக்கு ரோஸ் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

சித்தார்த் போட்ட கமெண்ட்

சித்தார்த் போட்ட கமெண்ட்

அதிதி ராவ் நடிகர் தர்மேந்திராவுக்கு ரோஸ் கொடுக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்ததும் முதல் ஆளாக நடிகர் சித்தார்த் ரெண்டு ரெட் ஹார்ட்டீன் எமோஜிக்களை போட்டு கமெண்ட் போட்டுள்ளார். பாவம் சித்தார்த் என சில நெட்டிசன்கள் அதிதி ராவின் இந்த போஸ்ட்டை பார்த்து கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X