போதை மருந்தை கொடுத்து நிர்வாணமாக வீடியோ எடுத்தார்.. நடிகை மீது முன்னாள் கணவர் பரபரப்பு புகார்!

மும்பை: போதை மருந்து கொடுத்து, நிர்வாணமாக்கி ராக்கி சாவந்த் வீடியோ எடுத்து மிரட்டியதாக முன்னாள் கணவர் ஆதில் கான் துரானி பேட்டியில் கூறியுள்ளார்.

இந்தி தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ள ராக்கி சாவந்த், தமிழில் என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.

பிக்பாஸ் மராத்த 4 நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ராக்கி சாவந்த், தன்னை விட 11 வயது இளையவரான ஆதில் கானை திருமணம் செய்து கொண்டார். பின் சில மாதங்களிலேயே, ஆதில் தன்னை கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் அளித்தார்.

Adil Khan Durrani Shares shocking deets about Rakshi sawant

ராக்கி சாவந்த்: மேலும், தனது வங்கியில் இருந்த பணத்தை தனக்கு தெரியாமல் எடுத்து செலவு செய்துவிட்டதாகவும், என்னுடைய நிர்வாண வீடியோவை பணத்திற்காக விற்றுவிட்டதாகவும் அடுக்கடுக்கான புகார்களை கூறியதால், ஆதில் துரானி கைது செய்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஐந்து மாதங்களுக்கு பின் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

திருமணம் செய்துகொண்டோம்: தற்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆதில் கான் துரானி, முன்னாள் கணவர் ரித்தேஷ் சிங்குடன் சேர்ந்து கொண்டு என்னை ஏமாற்றினார் என்றார். 2021ம் ஆண்டு என் நண்பர் மூலமாக ராக்கி சாவந்துடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது, தனது கணவர் ரித்தேஷை பிடிக்கவில்லை என்று கூறி என்னுடன் நெருங்கி பழகினோர். இதையடுத்து,2022ம் ஆண்டு மே மாதம், இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டோம்.

பொய்யான புகார்: என்னை திருமணம் செய்து கொண்ட பிறகும், ராக்கி என்னை ஏமாற்றிவிட்டு முதல் கணவருடன் தொடர்பில் இருந்தது எனக்கு தெரியவந்தது. இதனால், நான் விவாகரத்து கேட்டேன், அவரும், விவாகரத்து கொடுக்க சம்மதித்தார். மேலும், அவரைப் பற்றியும் ரித்தேஷ் பற்றியும் என்னிடம் இருந்த அனைத்து ஆதாரங்களையும் அவரிடம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் என்னை வீட்டுக்கு அழைத்து, ஆனால், வீட்டுக்கு போலீசை வரவழைத்து பொய்யான புகார்களை கூறி என்னை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டார்.

Adil Khan Durrani Shares shocking deets about Rakshi sawant

நிர்வாண வீடியோ: உண்மையில், அவரை நான் தாக்கவில்லை, அவர் என்னை பல முறை தாக்கி உள்ளார். மேலும், எனக்கு போதை மருந்தை கொடுத்து நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து வைத்துள்ளார். எனது பெயரை கெடுக்கவும், ஓரின சேர்க்கையாளர் என தனக்கு முத்திரை குத்தவும் மறைமுகமாக அந்த வீடியோவை எடுத்துள்ளார்.

பணம் கொடுத்து மிரட்டினார்: மேலும், ஈரானிய பெண் என் தோழி, அவளது படிப்புக்கும் அவரது அம்மாவின் மருத்துவ செலவிற்கு நான் பணம் அனுப்பி இருக்கிறேன். அந்த பெண் என் நெருங்கிய தோழியாக இருந்ததால் ராக்கி அவரை இரண்டு முறை சந்தித்து இருக்கிறான். ஐந்து வருடமாக உறவில் இருக்கும் பெண்ணை நான் எப்படி பலாத்காரம் செய்ய முடியும். அந்த ஈரானிய பெண்ணுக்கு மூன்று லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து, ராக்கி இவ்வாறு செய்யவைத்துள்ளார்.

ஆதாரங்கள் இருக்கிறது: ராக்கி சாவந்தால் என் வாழ்க்கையே போய்விட்டது, அவருக்காக ஆட்டோமொபைல் தொழில் ரூ.1.5 கோடி முதலீடு செய்தேன், நடன அகாடமி, புரொடக்‌ஷன் ஹவுஸ், துபாயில் ஒரு பிளாட், கோரேகானில் ஒரு பிளாட், மேலும், விலையுயர்ந்த பரிசு பொருட்கள் என மொத்தம் ரூ.91 லட்சத்தை அவருக்காக செலவு செய்து இருக்கிறேன். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. அவரின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வருவேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X