Adipurush: ஆதிபுருஷ் ஓடிய தியேட்டர் உள்ளே திடீரென எட்டிப்பார்த்த உருவம்.. கண்ணீர்விட்ட ரசிகர்கள்!
ஹைதராபாத்: பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஓம் ராவத் இயக்கியுள்ள இந்தப் படம் 3டி பிளஸ் அனிமேஷன் டெக்னாலஜியில் உருவாகியுள்ளது.
ஆதிபுருஷ் படம் ஓடும் திரையரங்குகளில் ஆஞ்சநேயருக்காக ஒரு சீட் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அதனைவிடவும் தரமான ரியல் சம்பவம் ஒன்று ஆதிபுருஷ் திரையிடப்பட்ட திரையரங்கில் அரங்கேறியுள்ளது.
பிரபாஸ் ரசிகர்கள் செய்த ரியல் சம்பவம்
பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஓம் ராவத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரபாஸுடன் கிருத்தி சனோன், சயிப் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராமாயணத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள ஆதிபுருஷ், 3டி தொழில்நுட்பத்தில் அனிமேஷன் படமாக வெளியாகியுள்ளது.
ஆதிபுருஷ் படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியான போதே நெட்டிசன்களால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. சின்ன பசங்களுக்கான கார்ட்டூன் மூவி போல உருவாகியுள்ளதாக கிண்டல் செய்தனர். பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ் இப்படியான படங்களில் நடித்தால் அவரது மார்க்கெட்டே காலியாகிவிடும் என விமர்சனம் செய்தனர். இன்னொரு பக்கம் ராமாயணத்தை அவமதித்துவிட்டதாக சில அமைப்புகள் ஆதிபுருஷ் படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தன.
இதனிடையே ஆதிபுருஷ் திரையிடப்படும் திரையரங்குகளில் ஆஞ்சநேயருக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, ஆதிபுருஷ் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஆஞ்சநேயருக்காக ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் ஆதிபுருஷ் படம் திரையிடப்பட்டுள்ளது. அந்த திரையரங்கில் குரங்கு ஒன்றும் நுழைந்ததோடு, ஆதிபுருஷ் படத்தை பார்த்து ரசித்துள்ளது.
இதனை வீடியோ எடுத்த பிரபாஸ் ரசிகர்கள், ஆதிபுருஷ் படம் பார்க்க ஆஞ்சநேயருக்காக சீட் ஒதுக்கிய படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். ஆஞ்சநேயர் எங்கும் இருப்பார் என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி என்றும் புகழ்பாடி வருகின்றனர். அதேநேரம், பிரபாஸ் ரசிகர்கள் இப்படியும் இருப்பார்களா என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இதனால் இருதரப்புக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில், இந்தியா முழுவதும் வெளியாகியுள்ள ஆதிபுருஷ் படத்திற்கு நெகட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன. படம் பார்த்த பலரும், தியேட்டரில் இருக்கவே முடியவில்லை, இதில் எப்படி பிரபாஸ் நடித்தார் என கலாய்த்து வருகின்றனர். 2 கே கிட்ஸ்களை குறிவைத்து எடுக்கப்பட்டிருந்தாலும், ஆதிபுருஷ் படம் எந்த தரப்பு ரசிகர்களையும் கவரவில்லை எனவும் விமர்சித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











