Adipurush Trailer - ஆதிபுருஷ் ட்ரெய்லர்.. ட்ரெய்லர் வெளியீடா? ஜெய்ஸ்ரீராம் மாநாடா? ரசிகர்கள் கேள்வி
திருப்பதி: Adipurush Trailer (ஆதிபுருஷ் ட்ரெயலர்) பிரபாஸ் நடிப்பில் உருவாகியயிருக்கும் ஆதிபுருஷ் படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது.
ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இது பான் இந்தியா படமாக உருவாகியுள்ள காரணத்தால் இதன் ட்ரெய்லரை படக்குழு ஒவ்வொரு மொழியிலும் தனித்தனியாக வெளியிட்டது.
ட்ரோல்களை சந்தித்த டீசர்: கடந்த ஆண்டு இப்படத்தின் முதல் டீசர் வெளியானபோது அதில் இடம்பெற்ற கிராஃபிக்ஸ் காட்சிகள் சமூக வலைதளங்களில் கடும் ட்ரோலுக்கு உள்ளாகின. இதனையடுத்து படத்தின் கிராஃபிக்ஸ் தரத்தை மேம்படுத்த படக்குழு முடிவு செய்து அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுவந்தது. இதனால் கடந்த ஜனவரியில் வெளியாக வேண்டிய படம் தள்ளிப்போக வேண்டிய சூழல் ஏற்பட்டது.

முன்னேறிய கிராஃபிக்ஸ் தரம்: இதனையடுத்து கிராஃபிக்ஸுக்கான வேலைகளை முடித்த கையோடு வெளியான ட்ரெய்லர் ஓரளவுக்கு ஓகே என்ற நிலையில் இருந்தது. வரும் ஜூன் 16ஆம் தேதி வெளியாக உள்ள 'ஆதிபுருஷ்' படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான பிரபாஸ் இந்தப் படம் மூலம் மேற்கொண்டு பிரபலம் அடைவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
அனுமருக்கு ஒரு சீட்: ஏற்கனவே படத்தின் முதல் டீசர் ட்ரோலுக்கு உள்ளான சூழலில் ஆதிபுருஷ் படக்குழுவின் ஒரு அறிவிப்பு இன்று காலை முதல் கடுமையாக ட்ரோலுக்கு ஆளானது. அதாவது படம் வெளியாகும் ஒவ்வொரு திரையரங்கிலும் அனுமருக்கு என்று ஒரு சீட் ரிசர்வ் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆதிபுருஷ் படத்தை மீம்ஸ்களால் வைத்து செய்துகொண்டிருக்கின்றனர்.

ஆக்ஷன் ட்ரெய்லர்: இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. திருப்பதியில் நடந்த நிகழ்ச்சியில் இந்த ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்னதாக முதலில் வெளியான ஆதிபுருஷ் ட்ரெய்லர் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்தது. எனவே இந்த ட்ரெய்லர் அந்த சாதனையை முறியடிக்குமா என பிரபாஸ் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

ட்ரெய்லர் ஹைலைட்ஸ்: திருப்பதியில் ஆதிபுருஷ் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நடந்த சூழலில் அது ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்டா இல்லை ஜெய்ஸ்ரீராம் மாநாடா என்ற கேள்வியை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர். அதுமட்டுமின்றி பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான பிரபாஸ் இந்தப் படத்தின் மூலம் தனது கிராஃபிலிருந்து குறிப்பாக தென்னிந்தியாவின் பெரும்பாலான ரசிகர்களின் விமர்சனத்தை சந்தித்துவிடுவாரோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியிருப்பதாக அவர்கள் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











