Adipurush Bookings: இப்பவே இத்தனை கோடி ரூபாய்க்கு டிக்கெட் புக்கிங்கா? பிரபாஸின் ஆதிபுருஷ் அதிரடி!
சென்னை: பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த படங்கள் ஓடவில்லை என ட்ரோல்களும் மீம்களும் பறந்து வந்த நிலையில், ஆதிபுருஷ் படத்தின் மூலம் மீண்டும் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக பிரபாஸ் மாறப்போவது கன்ஃபார்ம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராமாயண கதையை அடிப்படையாகக் கொண்டு ஆதிபுருஷ் என்கிற டைட்டிலில் இயக்குநர் ஓம் ராவத் இந்த படத்தை லைவ் ஆக்ஷன் படமாக இயக்கி உள்ளார்.
பிரபாஸ், க்ரித்தி சனோன், சைஃப் அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் சிஜி மிரட்டலில் இந்த வாரம் வெளியாக உள்ள ஆதிபுருஷ் படத்திற்கு அதிகளவில் டிக்கெட்டுகள் அட்வான்ஸ் புக் ஆகி வருவதாக கூறுகின்றனர்.

பிரபாஸின் ஆதிபுருஷ்: இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படங்கள் நடிகர் பிரபாஸின் மார்க்கெட்டை சர்வதேச அளவில் உயர்த்தியது. அதன் பின்னர் பாலிவுட் இயக்குநர்கள் பிரபாஸை வைத்து படமெடுக்க போட்டி போட்டனர்.
சாஹோ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவானாலும், படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. கடந்த ஆண்டு வெளியான ராதே ஷ்யாம் படமும் பல கோடி பட்ஜெட்டில் எடுத்து பெரிய ஃபிளாப் ஆனது. இந்நிலையில், வரும் ஜுன் 16ம் தேதி ஆதிபுருஷ் திரைப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.
சமீபத்தில், அந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவே மிகப்பெரிய அளவில் நடைபெற்று ஒட்டுமொத்த சினிமா உலகத்தையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த படம் ராமாயண கதை என்பது குறிப்பிடத்தக்கது.
300 கோடிக்கு டிக்கெட் விற்பனை: லைவ் ஆக்ஷன் அனிமேஷன் படமாக உருவாகி உள்ள ஆதிபுருஷ் கார்ட்டூன் படம் என ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், அந்த படத்தை மீண்டும் சில கோடிகள் செலவில் மெருகேற்றி தற்போது படக்குழுவினர் வெளியிட உள்ளனர்.
இந்நிலையில், படத்தின் ப்ரீ புக்கிங்கே இதுவரை 300 கோடி ரூபாய்க்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாக அட்டகாசமான தகவல்கள் வெளியாகி பிரபாஸ் ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளன.

1000 கோடி வசூல்: பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம் ஹேட்டர்களுக்கு சரியான பதிலடியை பாக்ஸ் ஆபிஸில் கொடுக்கும் என்றும் அதிகபட்சமாக 1000 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை இந்த படம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் பிரபாஸ் ஆதிபுருஷ் படம் மூலம் மிகப்பெரிய கம்பேக் கொடுப்பார் என்றும் அதனை தொடர்ந்து சலார், ப்ராஜெக்ட் கே என இந்திய சினிமா உலகையே டார்லிங் பிரபாஸ் ரூல் செய்யப் போகிறார் என அவரது ரசிகர்கள் #AdipurushBookings ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











