twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆதிபுருஷ் படத்தை தடை செய்ய வேண்டும்.. அயோத்தி ராமர் கோயிலின் தலைமை குரு அதிரடி கருத்து!

    |

    மும்பை: பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தை வெளியிடக் கூடாது என்றும் அதன் வெளியீட்டை தடை செய்ய வேண்டும் என அயோத்தி ராமர் கோயிலின் தலைமை குருவாக இருக்கும் சத்யேந்திரதாஸ் வலியுறுத்தி இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.

    ராமாயண கதையை மையப்படுத்தி இந்தியா முழுவதும் ஏகப்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன.

    ஆனால், இதுவரை இப்படி யாருமே ராமரையோ ராமாயணத்தையோ கொச்சைப் படுத்தவில்லை என பிரபாஸ் படத்திற்கு எதிராக மிகப்பெரிய போராட்டமே வெடித்துள்ளது.

    தசரா விழாவில் பிரபாஸ்

    தசரா விழாவில் பிரபாஸ்

    ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடித்துள்ள நடிகர் பிரபாஸ், செங்கோட்டையில் நடந்த தசரா விழாவில் கலந்து கொண்டு ராவண பொம்மையை அம்பு விட்டு அழித்த சம்பவம் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. ஒரு பக்கம் ஆதிபுருஷ் படத்திற்கு அமோகமாக பிரபாஸ் புரமோஷன் செய்து வரும் நிலையில், மறுபக்கம் அந்த படத்திற்கு எதிராக ட்ரோல்களும், படத்தையே தடை செய்ய வேண்டும் என்கிற குரல்களும் கிளம்பியுள்ளன.

    3டி பிரசாரம்

    3டி பிரசாரம்

    பிரபாஸின் ஆதிபுருஷ் டீசர் வெளியான நிலையில், அதனை பயங்கரமாக நாடு முழுவதும் ரசிகர்கள் ட்ரோல் செய்ய தொடங்கினர். படத்திற்கு சப்போர்ட் செய்ய வேண்டும் என நினைத்த சில பிரபலங்கள், உங்கள் மொபைல் போனில் பார்த்தால் ஆதிபுருஷ் நல்லா இருக்காது. 3டியில் பார்த்தால் அதன் எக்ஸ்பீரியன்ஸே வேற லெவல்ல இருக்கு என ஆதிபுருஷ் படத்துக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    ராமரை அவமதித்து விட்டனர்

    ராமரை அவமதித்து விட்டனர்

    ஆனால், மறுபக்கம் ஆதிபுருஷ் டீசர் நல்லா இருக்கு, இல்லை என்பதை தாண்டி ராமரையே இயக்குநர் ஓம் ராவத் மற்றும் பிரபாஸ் படக்குழுவினர் அவமதித்து விட்டனர். இதை பார்க்க ராமாயணம் போல தெரியவில்லை. இஸ்லாமியர்களின் கதை போல தெரிகிறது என பெரிய சர்ச்சையே வட இந்தியாவில் வெடித்துள்ளது.

    விஸ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு

    விஸ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு

    விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தை தியேட்டர்களில் வெளியிடக் கூடாது, தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்துள்ளது. ராமர், ஹனுமன், ராவணன் உள்ளிட்ட கதாபாத்திரங்களை படத்தில் காட்டிய விதம் மிகவும் தவறான அணுகுமுறை என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    அயோத்தி தலைமை குரு கண்டனம்

    அயோத்தி தலைமை குரு கண்டனம்

    இந்நிலையில், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை தொடர்ந்து அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் தலைமை குருவான சத்யேந்திர தாஸ் ஆதிபுருஷ் படத்திற்கு எதிரான தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். தன்ஹாஜி படத்தை இயக்கிய இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ள பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படத்தில் ராமர் மற்றும் ஹனுமனை தவறாக சித்தரித்துள்ளனர் என கண்டித்துள்ளார்.

    பெரிய சிக்கல்

    பெரிய சிக்கல்

    வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரம்மாண்டமாக திரையரங்குகளில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், இப்படியொரு பெரிய சிக்கல் படத்திற்கு எழுந்துள்ளது. படம் திட்டமிட்டபடி அதிக தியேட்டர்களில் வெளியாகுமா? டிரைலர் காட்சிகளை வெளியிட்டால் மேலும் சர்ச்சை அதிகரிக்குமா? அனிமேஷன் படம் போல இருப்பதால் ரசிகர்கள் பாகுபலி படத்துக்கு கொடுத்த அளவுக்கு வரவேற்பு கொடுப்பார்களா என ஏகப்பட்ட கேள்விகள் கிளம்பி உள்ளன.

    English summary
    Ayodhya Ram Temple Head priest calls ban for Prabhas Adipurush and he told, doesn't show Lord Rama and Hanuman as mentioned in the epic either and hence goes against their dignity.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X