Adipurush Box Office Day 1: முதல் நாளிலேயே மரண அடி... ஆதிபுருஷ் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதுதானா?

ஹைதராபாத்: பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஓம் ராவத் இயக்கியுள்ள இந்தப் படம் 3டி பிளஸ் மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் உருவாகியுள்ளது.

600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.

ஆனால், ஆதிபுருஷ் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் பிரபாஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

ஆதிபுருஷ் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்:பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. பான் இந்தியா படமாக உருவான ஆதிபுருஷ் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஓம் ராவத் இயக்கிய இப்படத்தில் கிருத்தி சனோன், சைஃப் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 Adipurush Box Office Day 1: Prabhas starrer Adipurush worldwide box office collection Day 1 report

600 கோடி பட்ஜெட், 3டி, மோஷன் கேப்சர் டெக்னாலஜி என ஹாலிவுட்டுக்கே சவால் விடும் வகையில் ஆதிபுருஷ் படத்தை இயக்கினார் ஓம் ராவத். ஆனால், இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பு, விமர்சனம், பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் இவையெல்லாவற்றையும் பார்க்கும் போது பரிதாபமாக உள்ளது. ராமாயணத்தை மார்டன் வெர்ஷனில் பட்டி டிங்கரிங் செய்து, 2கே கிட்ஸ்களுக்காக எடுக்கப்பட்ட கார்ட்டூன் மூவி போல இருப்பதாக ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஆதிபுருஷ் படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியான போதே அதன் கிராபிக்ஸ் காட்சிகளை நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்தனர். இப்போது மொத்த படத்தையும் வச்சு செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வெளியான ஆதிபுருஷ் முதல் நாளில் உலகம் முழுக்க 60 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாம். உலகம் முழுவதும் 4000 ஸ்க்ரீன்களில் ரிலீஸாகியும் 60 கோடி வரை மட்டுமே கலெக்‌ஷன் ஆகியுள்ளது படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ப்ரீ புக்கிங்கில் 3.5 கோடி ரூபாய் வசூலித்த ஆதிபுருஷ், இந்தியாவில் 50 முதல் 55 கோடி வரை கலெக்‌ஷன் செய்துள்ளது. இதில், தெலுங்கில் 38 கோடி வரையும், இந்தியில் 10 கோடியும், மற்ற மொழிகளில் 5 கோடிகளும் வசூலித்துள்ளதாம். முக்கியமாக தமிழ்நாட்டில் சில பல லட்சங்கள் கூட வசூலாகவில்லை என சொல்லப்படுகிறது. நேற்றே சென்னை உட்பட பல நகரங்களில் ஆதிபுருஷ் படத்துக்கு டிக்கெட் புக்கிங் ஆகாமல் க்ரீனாக இருந்தது.

இந்தியா முழுவதும் 50 முதல் 55 கோடியும், உலகம் முழுவதும் 60 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாம் ஆதிபுருஷ். இதனால் முதல் வாரத்தில் அதிகபட்சமாக 150 முதல் 170 கோடி வரை கலெக்‌ஷன் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஆதிபுருஷ் மிக மிக மோசமான தோல்வியைத் தழுவியுள்ளதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். முக்கியமாக இயக்குநர் ஓம் ராவத் மீது பிரபாஸ் ரசிகர்கள் வெறியோடு இருக்கின்றனர். பாகுபலிக்குப் பின்னர் பிரபாஸ் நடித்த படங்கள் அனைத்துமே பாக்ஸ் ஆபிஸில் மோசமான ரெக்கார்டு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X