Adipurush Box Office Day 2: பாக்ஸ் ஆபிஸில் திணறும் ஆதிபுருஷ்... நொந்து நூடுல்ஸான பிரபாஸ் ரசிகர்கள்

ஹைதராபாத்: பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது.

ஓம் ராவத் இயக்கியுள்ள ஆதிபுருஷ் ராமாயணத்தை பின்னணியாக வைத்து பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

பிரபாஸுடன் சயிப் அலிகான், கிருத்தி சனோன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தின் முதல் இரண்டு நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் பிரபாஸ் ரசிகர்களுக்கு ஷாக்கிங்காக அமைந்துள்ளது.

 Adipurush Box Office Day 2: Prabhas starrer Adipurush earned 65.00 Cr India net on its second day

ஆதிபுருஷ் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்: பிரபாஸ் நடிப்பில் அனிமேஷன் திரைப்படமாக உருவாகியுள்ள ஆதிபுருஷ், நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. அதிக எதிர்பார்ப்பில் இருந்த இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸுடன் சயிப் அலிகான், கிருத்தி சனோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகப் பெரிய ஸ்டார் காஸ்டிங் இருந்து மேக்கிங் மரண மொக்கையாக இருப்பதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

600 கோடி பட்ஜெட்டில் 3டி, மோஷன் கேப்சர் டெக்னாலஜி என அனிமேஷன் படமாக உருவாகியுள்ளது ஆதிபுருஷ். ஆனால், மிக மோசமான மேக்கிங், சீரியல் போல ஒர்த் இல்லாத கிராபிக்ஸ் என ரசிகர்களை ரொம்பவே சோதித்துள்ளது. இதெல்லாம் போதாது என ஹாலிவுட் படங்களில் வரும் சில கிராபிக்ஸ் காட்சிகளை அப்படியே அப்பட்டமாக திருடியுள்ளாராம் ஓம் ராவத். இதனால், ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார்கள்.

இந்நிலையில் ஆதிபுருஷ் படத்திற்கு கிடைத்த நெகட்டிவான விமர்சனத்தால் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் ரொம்பவே குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி முதல் நாளில் இந்தியாவில் 60 கோடி, மற்ற நாடுகளில் 20 கோடி என மொத்தம் 80 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருந்தது. உலகம் முழுவதும் 4000 ஸ்க்ரீன்களில் ரிலீஸாகியும் பிரபாஸின் படத்துக்கு இது மோசமான ஓப்பனிங் என சொல்லப்படுகிறது.

முதல் நாளைத் தொடர்ந்து இரண்டாவது நாளிலும் ஆதிபுருஷ் படத்தின் வசூலில் பெரிய மாற்றம் இல்லையாம். அதன்படி, இந்தியில் 30 கோடியும் தெலுங்கில் 40 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளதாம். மற்ற மொழிகளில் சுத்தமாக வசூல் இல்லை என சொல்லப்படுகிறது. இந்தியா உட்பட உலகம் முழுவதும் இரண்டாவது நாள் மொத்த வசூல் 80 கோடி ரூபாய் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், ஆதிபுருஷ் திரைப்படம் முதல் இரண்டு நாட்களில் 160 முதல் 170 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 600 கோடி பட்ஜெட், பிரம்மாண்டமான ப்ரோமோஷன் என எல்லாம் இருந்தும் ஆதிபுருஷ் படத்தின் வசூல் பிரபாஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாகுபலி வெற்றியால் பான் இந்தியா சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்ட பிரபாஸுக்கு, அதன் பின்னர் வெளியான படங்கள் எதுவுமே ஹிட்டாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X