Adipurush Box Office Day 3: ஆதிபுருஷ் முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸ் இவ்வளவு தானா..? ஏமாற்றத்தில் பிரபாஸ்

ஹைதராபாத்: பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் கடந்த வாரம் 16ம் தேதி வெளியானது.

பான் இந்தியா படமாக பல மொழிகளில் வெளியான ஆதிபுருஷுக்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை.

முக்கியமாக பிரபாஸ் ரசிகர்கள் மிகப் பெரிய ஏமாற்றத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ஆதிபுருஷ் படத்தின் முதல் வாரம் கலெக்‌ஷன் குறித்து உண்மையான நிலவரம் தெரியவந்துள்ளது.

ஆதிபுருஷ் முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்:பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியானது. ஓம் ராவத் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ராமாயணத்தை பின்னணியாக வைத்து மோசன் கேப்சர், 3டி டெக்னாலஜியில் இப்படத்தை இயக்கியிருந்தார் ஓம் ராவத்.

 Adipurush Box Office Day 3: Prabhas starrer Adipurush film finally crossed the Rs 200 crore mark on day 3

பிரபாஸுடன் சயிப் அலிகான், கிருத்தி சனோன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆதிபுருஷ் முழுவதும் மோசன் கேப்சர் டெக்னாலஜியில் உருவானதால், படத்தின் பட்ஜெட் 600 கோடிக்கும் அதிகமாக சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால் படம் வெளியாகும் முன் ப்ரோமோஷனுக்காகவும் பல கோடிகள் செலவு செய்யப்பட்டது. ஆனால், ஆதிபுருஷ் டீசர், ட்ரெய்லர் என எல்லாமே நெட்டிசன்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது.

இன்னொரு பக்கம் ராமாயணத்தை அவமதித்துவிட்டதாக சில இந்து அமைப்புகளும் ஆதிபுருஷ் படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. இவை எல்லாவற்றையும் கடந்து வாரம் வெளியான ஆதிபுருஷ் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இதனால், முதல் நாளிலேயே மோசமான ஓபனிங் கிடைத்ததுடன் வசூலிலும் டல் அடித்தது. இந்நிலையில், முதல் மூன்று நாட்களில் மொத்தமே ரூ.230 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, முதல் நாளில் இந்தியாவில் 60 கோடியும், வெளிநாடுகளில் 20 கோடியும் என மொத்தம் ரூ. 80 கோடி வசூலித்திருந்தது. இரண்டாவது நாளில் இந்தியில் 30 கோடியும் தெலுங்கில் 40 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தி, தெலுங்கு தவிர மற்ற மொழிகளில் சுத்தமாக வசூல் இல்லை என சொல்லப்படுகிறது. இந்தியா உட்பட உலகம் முழுவதும் இரண்டாவது நாள் மொத்த வசூல் 80 கோடி ரூபாய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முதல் வார இறுதிநாளான நேற்று ஆதிபுருஷ் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று இந்தப் படம் மொத்தமே 64 கோடி ரூபாய் தான் வசூலித்துள்ளதாம். இதன்மூலம் முதல் வார இறுதியில் 126 முதல் 135 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், முதல் 3 நாட்களிலேயே பெரிய அளவில் வசூல் இல்லாததால், இனிவரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகும் என்றே சொல்லப்படுகிறது. இதனால் பிரபாஸ் உட்பட ஆதிபுருஷ் படக்குழுவினர் சோகத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X