Adipurush BoxOffice: பரிதாபத்தில் பிரபாஸின் ஆதிபுருஷ்... டிக்கெட் விலையை குறைத்தும் இதுதான் நிலைமை

ஹைதராபாத்: பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் அதிக எதிர்பார்ப்புடன் வெளியானது.

ஓம் ராவத் இயக்கத்தில் கடந்த வாரம் 16ம் தேதி ரிலீஸான இந்தப் படத்திற்கு நெகட்டிவான விமர்சனங்களே கிடைத்தன.

முதல் நாளில் இருந்தே வசூலில் திணறி வரும் ஆதிபுருஷ், தற்போது பாக்ஸ் ஆபிஸில் தரை தட்டிய கப்பலாக மூழ்கியே விட்டதாம்.

ஒருகட்டத்தில் டிக்கெட் விலையை குறைத்தும் ஆதிபுருஷ் பாக்ஸ் ஆபிஸ் வசூல், தயாரிப்பாளருக்கு தலை வலியாக உருவெடுத்துள்ளது.

Adipurush movie actors salary details

ஆதிபுருஷ் 7ம் நாள் பாக்ஸ் ஆபிஸ்: பான் இந்தியா சூப்பர் ஸ்டார் என டோலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் பிரபாஸ். பாகுபலி வெற்றிக்குப் பின்னர் பிரபாஸின் படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அப்படி அதிக எதிர்பார்ப்புடன் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் பிரபாஸின் கேரியருக்கே ஆப்பு வைத்துள்ளது. அதாவது முதல் நாளில் இருந்தே வசூலில் மரண அடி வாங்கி வருகிறதாம் பிரபாஸின் ஆதிபுருஷ்.

கடந்த வாரம் 16ம் தேதி வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் ராமாயணத்தை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது. ஓம் ராவத் இயக்கியுள்ள ஆதிபுருஷ் 600 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரபாஸுடன் சயிப் அலிகான், கிருத்தி சனோன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஆதிபுருஷ் டீசர் வெளியான போதே கடும் சர்ச்சைகளையும் ட்ரோல்களையும் சந்தித்தது.

இப்போது படமும் மிக மோசமான தோல்வியை தழுவி உள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மோசன் கேப்சருடன் 3 டி டெக்னாலஜியில் உருவான ஆதிபுருஷ் மேக்கிங்கில் சுமாராக மட்டும் இருப்பதாக ரசிகர்கள் கூறியிருந்தனர். அதேபோல், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை பங்கமாக கலாய்த்தனர். இன்னொருபக்கம் சீதை குறித்த வசனங்களும் கடும் சர்ச்சையானது. இதனால் முதல் நாளில் இருந்தே வசூலில் மிக மோசமாகிவிட்டதாம் ஆதிபுருஷ்.

ஆதிபுருஷ் படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் ஆஞ்சநேயருக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டது இன்னொரு பெரும் சர்ச்சை. இந்நிலையில், பான் இந்தியா படமாக வெளியான ஆதிபுருஷ், முதல் மூன்று நாட்களில் இந்தி, தெலுங்கு மொழிகளில் மட்டுமே ஓரளவு வரவேற்பைப் பெற்றது. ஆனால் தற்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆனதைப் போல இந்தியில் ரொம்பவே நிலைமை மோசமாகியுள்ளதாம்.

அதாவது 7வது நாளான நேற்று இந்தியில் மொத்தமே 3.15 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது ஆதிபுருஷ். அதுவும் கூட டிக்கெட் விலையை குறைத்தும் கூட ரசிகர்களிடம் ஆதிபுருஷ் படம் பார்க்க விருப்பம் இல்லையாம். இந்தியா முழுவதும் நேற்று ஆதிபுருஷ் இந்தி வெர்ஷனை பார்க்க 10 முதல் 11 சதவீதம் இருக்கைகளே புக்கிங் ஆகியுள்ளது. இந்தியிலேயே இப்படியென்றால் மற்ற மொழிகளில் கேட்கவே வேண்டாம்.

இதனிடையே ஆதிபுருஷ் படம் இதுவரை மொத்தம் 410 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு நேற்று அறிவித்திருந்தது. ஆனால், உண்மையான வசூல் நிலவரம் 350 கோடி ரூபாய் தான் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பிரபாஸின் படங்களில் மிக மோசமான வசூல் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், விரைவில் பிரபாஸின் சலார் ரிலீஸாக உள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அந்தப் படம் பக்கம் திரும்பியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X