Adipurush Box Office: ஆடிய ஆட்டம் என்ன... அடங்கிப் போன ஆதிபுருஷ் வசூல்... எஸ்கேப் ஆன பிரபாஸ்!
ஹைதராபாத்: பிரபாஸ், கீர்த்தி சனோன் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் கடந்த 16ம் தேதி ரிலீஸானது.
ஓம் ராவத் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.
ஆனால், மோசமான மேக்கிங், கிராபிக்ஸ் போன்றவற்றால் நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்றது.
இதனால் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான ஆதிபுருஷ் படத்தின் வசூல் ரொம்பவே மோசம் என சொல்லப்படுகிறது.

பாக்ஸ் ஆபிஸில் தடுமாறும் ஆதிபுருஷ்: பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் கடந்த 16ம் தேதி வெளியானது. ஓம் ராவத் இயக்கிய இந்தப் படம் ராமாயணத்தை பின்னணியாகக் கொண்டு உருவானது. பிரபாஸ் ராமர் கேரக்டரிலும் அவருக்கு ஜோடியாக சீதை பாத்திரத்தில் கீர்த்தி சனோனும் நடித்திருந்தனர். அதேபோல், சயிஃப் அலிகான் ராவணன் கேரக்டரிலும் நடித்திருந்தார்.
ஆரம்பம் முதலே ஆதிபுருஷ் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. மேலும் பான் இந்தியா படமாக உருவானதால் அனைத்து மொழிகளிலும் வசூலில் மாஸ் காட்டும் என சொல்லப்பட்டது. ஆனால், முதல் டீசர் வெளியான போதே ஆதிபுருஷ் படத்துக்கு எதிராக நெட்டிசன்கள் ட்ரோல் செய்யத் தொடங்கிவிட்டனர். முக்கியமாக பிரபாஸின் கேரக்டர் டிசைனிங் மிக மோசமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
அதேபோல், ஒட்டுமொத்தமாக கிராபிக்ஸ், மேக்கிங் என அனைத்துமே சொதப்பிவிட்டதாக கூறியிருந்தனர். இன்னொரு பக்கம் ஆதிபுருஷ் படத்தில் சையிஃப் அலிகான் ராவணனாக நடித்ததும் சர்ச்சையானது. அதேபோல், ஆதிபுருஷ் படக்குழுவினர் ராமாயணத்தை அவமதித்துவிட்டதாகவும் சில அமைப்புகள் குற்றம்சாட்டத் தொடங்கின. இத்தனை சர்ச்சைகளையும் கடந்து வெளியான ஆதிபுருஷ், முதல் நாளில் வசூலிலேயே மரண அடி வாங்கியது.
மோஷன் கேப்சருடன் 3D டெக்னாலஜி, கிராபிக்ஸ் காட்சிகள் என எதுவுமே இப்படத்தில் எடுபடவில்லை. அதேபோல், ஆஞ்சநேயருக்காக ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டதும் ட்ரோல் ஆனது. இதனால் முதல் நாளில் இருந்தே மோசமான பாக்ஸ் ஆபிஸ் வசூல், இப்போது அதாள பாதளத்தில் கொண்டுபோய் விட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில், ஆதிபுருஷ் படம் திரையிடப்படும் திரையரங்குகளில் பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாகக் கிடக்கின்றனவாம்.
இதன் காரணமாக ஆதிபுருஷ் திரைப்படம் இதுவரை 450 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. படக்குழு தரப்பில் இருந்து 450 கோடி என அறிவிக்கப்பட்டாலும் உண்மையான நிலவரம் 400 கோடிக்குள் மட்டுமே இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரபாஸின் படங்களில் இது மிக மோசமான வசூல் என சொல்லப்படுகிறது. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ஆதிபுருஷ் படத்தால் தயாரிப்பாளருக்கு 200 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.
ஆதிபுருஷ் படத்தை அதிகம் எதிர்பார்த்திருந்த பிரபாஸ், இப்படியொரு மரண அடி விழும் என நினைத்துக்கூட பார்க்கவில்லையாம். இதனால், சலார், ப்ராஜக்ட் கே படங்களில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டாராம் பிரபாஸ். இதனிடையே ஆதிபுருஷ் படத்தின் டிக்கெட் விலையை குறைத்தும் வசூலில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என தயாரிப்பாளர்கள் புலம்பி வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











