Adipurush BoxOffice: ஆதிபுருஷ் பாக்ஸ் ஆபிஸ்... அபிஸியல் அப்டேட்டே இவ்வளவு தானா... சோலி முடிஞ்சுதா?

ஹைதராபாத்: பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் கடந்த வாரம் 16ம் தேதி வெளியானது.

ஓம் ராவத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.

அதேபோல், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள், மேக்கிங் ஆகியவையும் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டன.

இந்நிலையில், ஆதிபுருஷ் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் குறித்து படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது.

 Adipurush Box Office: Prabhas starrer Adipurush film finally crossed the Rs 400 crore

ஆதிபுருஷ் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: பிரபாஸ் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. ராமாயணத்தை பின்னணியாக வைத்து ஓம் ராவத் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். 600 கோடி பட்ஜெட்டில் 3டி, மோஷன் கேப்சர் என பிரம்மாண்டமாக உருவான ஆதிபுருஷ் எதிர்பார்த்த ஓபனிங் கிடைக்காமல் தடுமாறி வருகிறது.

பிரபாஸுடன் சயிப் அலிகான், கிருத்தி சனோன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஆனாலும் மிக மோசமான மேக்கிங், கிராபிக்ஸ் காட்சிகளால் ஆதிபுருஷ் படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்களே கிடைத்தன. ஏற்கனவே டீசர், ட்ரெய்லர் வெளியான போதே ஆதிபுருஷ் படத்தை ட்ரோல் செய்யத் தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள். இப்போது மொத்த படத்தையும் வச்சு செய்து வருகின்றனர்.

ஆதிபுருஷ் படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் ஆஞ்சநேயருக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. இதுவே மிகப் பெரிய ட்ரோலான நிலையில், தற்போது ரசிகர்களே இல்லாத திரையரங்குகளை வைத்து இன்னும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். மேலும், பான் இந்தியா படமாக வெளியான ஆதிபுருஷ், இந்தி, தெலுங்கு மொழிகளில் மட்டுமே ஓரளவு வரவேற்புப் பெற்றுள்ளது. மற்ற மொழிகளில் பிரபாஸின் பிராண்ட் வேல்யூ சுத்தமாக எடுபடவில்லையாம்.

இதனால், முதல் மூன்று நாட்களில் மொத்தமே ரூ.230 கோடி மட்டுமே வசூலித்தது. வார இறுதியிலேயே எதிர்பார்த்த கலெக்‌ஷன் கிடைக்காமல் தட்டுத் தடுமாறிய ஆதிபுருஷ், அடுத்தடுத்த நாட்களிலும் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் 7வது நாளான இன்று ஆதிபுருஷ் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி இந்தப் படம் 6 நாட்கள் முடிவில் மொத்தம் 410 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். உலகம் முழுவதும் மொத்தமாகவே இதுதான் ஆதிபுருஷ் படத்தின் வசூல் என படக்குழுவே அறிவித்துள்ளது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபாஸ் போன்ற மாஸ் ஹீரோக்களின் படம் இவ்வளவு குறைவாக கலெக்‌ஷன் செய்திருப்பதை திரை விமர்சகர்களும் பெரிய ஏமாற்றம் என்றே கூறி வருகின்றனர். அதேபோல், இனிவரும் நாட்களிலும் ஆதிபுருஷ் படத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு இருக்காது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X