சபாஷ் சரியான போட்டி...ரிலீசுக்கு முன்பே பாகுபலி சாதனையை காலி செய்த ஆதிபுருஷ்
மும்பை : வசூல், பிரம்மாண்டம் என இதுவரை எந்த இந்திய சினிமாவும் எட்டாத சாதனையை படைத்துள்ள படம் பாகுபலி. பாகுபலியின் இரண்டு பாகங்களுமே பிரம்மாண்ட வெற்றி பெற்று, வசூலை அள்ளிக் குவித்தன.
பாகுபலி படத்தால் உலக புகழடைந்து பிரபாஸ், அடுத்து நடித்து வரும் பிரம்மாண்ட படம், ஆதிபுருஷ். ராமாயணத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தை ஓம் ராவத் இயக்குகிறார்.

மற்றொரு பிரம்மாண்ட படத்தில் பிரபாஸ்
பிரபாஸ், சைஃப் அலிகான், கிருத்தி சனோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் ராமராக பிரபாசும், ராவணனாக சைஃப் அலிகானும் நடிக்கிறார்கள். மிகப் பெரிய பொருட் செலவில், இதுவரை கண்டிராத பிரம்மாண்ட படைப்பாக இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

பாகுபலி சாதனை காலி
இந்த படம் எடுத்து முடிக்கப்படுவதற்குள்ளாகவே பாகுபலி 2 படத்தின் சாதனையை முறியத்துள்ளது. இதுவரை இந்தியாவிலேயே பிரம்மாண்ட விஃஎப்எக்ஸ் ஷாட்களை கொண்ட படமாக பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் கருதப்பட்டது. ஆனால் ஆதிபுருஷ் படத்தின் ரிலீசுக்கு பிறகு, இந்த நிலை மாறி விடும்.

அதிக விஎஃப்எக்ட் ஷாட்கள்
பாகுபலி 2 படத்தில் அதிகபட்சமாக 2500 விஷுவல் எஃபெக்ட் ஷாட்கள் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை எந்த இந்திய படத்திலும் வைக்காத அளவிற்கு 8000 விஎஃப்எக்ட் ஷாட்கள் ஆதிபுருஷ் படத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது பாகுபலி 2 படத்தை விட 3 மடங்கு அதிகம்.

பட்ஜெட்டும் பெருசு தான்
அதிக செலவில் எடுக்கப்படும் படம் என்ற வகையிலும் ஆதிபுருஷ் தான் முதலிடத்தில் உள்ளது. படத்திற்கான பெரிய பட்ஜெட், நடிகர் - நடிகைகளின் சம்பளம் ஆகியவற்றை கணக்கிடுகையில் மிக பிரம்மாண்ட படமாக ஆதிபுருஷ் உருவெடுக்க உள்ளது. இதில் பாக்ஸ் ஆபீசிலும் நிச்சயம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு ரிலீஸ்
தற்போது கொரோனா காரணமாக படத்தின் வேலைகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா நிலைமை சரியாவதற்காக தான் படக்குழு காத்திருக்கிறது. நிலைமை சரியானதும் படப்பிடிப்பை மீண்டும் தொடர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படம் 2022 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











