Adipurush Box Office - சோழர்களுக்கு வந்த சோதனை.. பொன்னியின் செல்வன் 2 வசூலை முந்துகிறதா ஆதிபுருஷ்?
சென்னை: Adipurush Box Office (ஆதிபுருஷ் பாக்ஸ் ஆபிஸ்) ஆதிபுருஷ் படத்தின் வசூல் விரைவில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாக வசூலை முறியடித்துவிடும் என கூறப்படுகிறது.
பாகுபலி மூலம் இந்திய அளவில் பிரபலமான பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தில் நடித்திருக்கிறார். ஓம் ராவத் ராமாயணத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் சீதையாக கீர்த்தி சனோனி, ராவணனாக சைஃப் அலிகான் நடித்திருக்கின்றனர். மொத்தம் ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 16ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியானது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் படம் வெளியாகியிருக்கிறது.
ஜெய் அனுமன்: ராமாயணத்தை இந்தக் கால தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் விதமாக படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் படத்தின் ப்ரோமோஷனில்கூட இந்துத்துவா வாசம் அதிகமாகவே அடித்ததாக பலர் கூறினர். அதுமட்டுமின்றி படம் வெளியாகும் திரையரங்குகளில் அனுமனுக்கு ஒரு சீட் ரிசர்வ் செய்யப்படும் என படக்குழு அறிவித்தது. அறிவித்தபடியே படம் வெளியான திரையரங்குகளில் அனுமனுக்கென்று ஒரு சீட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது.

குரங்கு டூ பூஜைவரை: ஹைதராபாத்தில் ஒரு திரையரங்கில் படம் ஓடிக்கொண்டிருந்தபோது குரங்கு தியேட்டரின் ஓட்டை வழியாக வந்து எட்டி பார்த்தது. அதனை கண்ட ரசிகர்கள் படம் பார்க்க அனுமனே வந்துவிட்டதாக கூறி ஜெய் ஸ்ரீராம் என கத்தி ஆராவாரம் செய்தனர். அதேபோல் ஒரு திரையரங்கில் அனுமனுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் அனுமனின் சிலையை பூஜையும் நடத்தப்பட்டது. அதுதொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.
அனுமனுக்குத்தான் சீட்: இப்படி பல விஷயங்கள் நடந்தாலும் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன. படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் படு மொக்கையாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். இருப்பினும் பிரபாஸ் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ஃபேமஸ் என்பதால் படத்துக்கு அங்கு டீசண்ட்டான வரவேற்பு கிடைத்தது. அதேபோல் வடமாநிலங்களிலும் ஓரளவு வரவேற்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டிலோ பெரும்பாலான இருக்கைகள் அனுமனுக்கே காத்திருந்தன. அந்த அளவுக்கு படத்துக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
முதல்நாள் வசூல்: படத்தின் பட்ஜெட்டோ 600 கோடி. குறிப்பாக இந்த கிராஃபிக்ஸ் காட்சிகளுக்காக மட்டுமே 100 கோடி ரூபாயை படக்குழு செலவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் படத்தின் முதல் நாள் வசூலோ வெறும் 60 கோடி ரூபாய்தான் என தகவல் வெளியானது. இருப்பினும் அதனை ஆதிபுருஷ் ரசிகர்கள் திட்டவட்டமாக மறுத்து படம் வசூல் மழையில் நனைந்துவருவதாக சமூக வலைதளங்களில் தீவிரமாக களமாடினர்.
எவ்வளவு வசூல்: படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்து படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி படமானது 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்திருக்கிறது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதுவரை படம் 300 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே பொன்னியின் செல்வன் 2 படத்தின் மொத்த வசூலான 345 கோடி ரூபாயை விரைவில் முந்திவிடும் என ஆதிபுருஷ் ரசிகர்கள் கணித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications