Adipurush Box Office: அதல பாதாளத்திற்கு சென்ற ஆதிபுருஷ் வசூல்.. முதலுக்கே மோசம் ஆகிடுச்சே!

சென்னை: 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படத்தின் வசூல் 5வது நாளிலேயே அதள பாதாளத்துக்கு சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், க்ரித்தி சனோன், சைஃப் அலி கான் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து ராமாயணக் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் ஆதிபுருஷ்.

ஆதிபுருஷ் படத்தில் இந்து கடவுள்களை இழிவுப்படுத்தி உள்ளனர் என்றும் வசனங்கள் எல்லாம் சரியில்லை என்றும் சர்ச்சை வெடித்த நிலையில், நேபாளத்தில் பாலிவுட் படங்களின் வெளியீட்டுக்கே தடை உருவாகி உள்ளது.

 Adipurush Day 5 Box Office only 10 Crore rupees nationwide shocks

விமர்சனத்தில் மரண அடி: ஆதிபுருஷ் படத்தின் டீசருக்கு எந்தளவுக்கு கடுமையான விமர்சனங்கள் குவிந்ததோ அதன் பின்னர் 6 மாத காலம் செலவிட்டு மேலும், 100 கோடியை கொட்டி சிஜியை மேம்படுத்தி உள்ளோம் என ஆதிபுருஷ் படத்தை வெளியிட்டனர்.

ஆனால், படம் வெளியான உடனே விமர்சன ரீதியாக இதுவரை எந்த படத்துக்கும் கிடைக்காத அளவுக்கு கடுமையான நெகட்டிவிட்டி குவிந்தது. ரசிகர்கள் மத்தியிலும் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

ப்ரீ புக்கிங் செய்த மாயம்: ஆதிபுருஷ் படத்தின் டிரெய்லரில் வில்லன் போர்ஷனை அழகாக காட்டாமல் மறைத்து விட்டு படக்குழு வெளியிட்ட டிரெய்லரும் பிரம்மாண்ட புரமோஷனும் செய்த மாயம் காரணமாக ஆதிபுருஷ் படத்துக்கு ப்ரீ புக்கிங் பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் சூடு பிடித்தது.

300 கோடி வரை ப்ரீ புக்கிங்கே சாதனை படைத்தது என ப்ரமோஷனை மேலும், பெரிது படுத்தினர். ஆனால், படம் வெளியான பின்னர் அதனை பார்த்த ரசிகர்கள் இது என்ன டா வீடியோ கேம் போல இருக்கு என கடுப்பாகி விட்டனர்.

 Adipurush Day 5 Box Office only 10 Crore rupees nationwide shocks

வெறும் 10 கோடி: 375 கோடி ரூபாய் 4 நாட்களில் அதிகாரப்பூர்வ வசூல் என ஆதிபுருஷ் படக்குழு உலகளவிலான வசூல் நிலவரத்தை வெளியிட்ட நிலையில், திங்கட்கிழமை இந்தியளவில் வெறும் 16 கோடி ரூபாய் மட்டுமே வசூல் ஈட்டியதாகவும் செவ்வாய்க்கிழமை நிலைமை படு மோசமாக மாறி வெறும் 10 கோடி மட்டுமே வசூல் செய்தது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் படம் அதன் பட்ஜெட் அளவுக்கு கூட வசூல் செய்யாது என டிராக்கர்கள் கணித்துள்ள கணிப்பு தயாரிப்பு நிறுவனமான டி சீரிஸ் நிறுவனத்தை அப்செட் ஆக்கி உள்ளது. ஒட்டுமொத்தமாக ஆதிபுருஷ் திரைப்படம் 450 கோடியை உலகளவில் பெறுவதே கஷ்டம் என்று கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X