Adipurush: உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு மன்னிச்சுடுங்க.. சரண்டரான ஆதிபுருஷ் வசனகர்த்தா!
மும்பை: பிரபாஸ், க்ர்த்தி சனோன், சைஃப் அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் 500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாக்கிய ஆதிபுருஷ் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்ற நிலையில், அதற்காக அந்த படத்தின் வசனகர்த்தா பகிரங்க மன்னிப்புக் கேட்டுள்ளார்.
ராமாயண இதிகாசத்தை தழுவி அதனை மாடர்னைசேஷன் செய்து உருவாக்கிய இந்த 3டி படத்தை விமர்சகர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் கழுவி ஊற்றி விட்டனர்.

பிரபாஸுக்கு ஹாட்ரிக் தோல்வியை கொடுத்த இந்த படத்தில் இருந்து தப்பித்து அவர் சலார் பக்கம் தாவிய நிலையில், அடுத்ஹ்ட பட வாய்ப்பை பெறுவதற்காக தற்போது வசனகர்த்தா மனோஜ் முன்டஷிர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அனுமான் கடவுள் இல்லையா: ஆஞ்சநேயருக்கு தியேட்டரில் எக்ஸ்ட்ராவாக ஒரு சீட் கொடுங்க என இயக்குநர் ஓம் ராவத் படத்தை ப்ரமோட் செய்ய அப்படியொரு பில்டப் போட்ட நிலையில், ஆதிபுருஷ் வசனகர்த்தா படத்தில் வைத்த மோசமான வசனங்களுக்காக வறுத்தெடுக்கப்பட்டார்.
மேலும், பேட்டி ஒன்றில் அனுமான் கடவுளே இல்லை என்றும் கடவுள் ராமரின் பக்தனாக இருந்த நிலையிலேயே அவருக்கு அந்த அந்தஸ்த்து கிடைத்துள்ளது என பேசி சர்ச்சையை கிளப்பினார்.
ஏன்பா சின்ன வயசுலேயே லட்டுன்னு சூரியனை பிடிக்க போன கதையை எல்லாம் நீ படிக்கவே இல்லையா? என நெட்டிசன்கள் ஏகப்பட்ட ட்ரோல்களை போட்டு வசனகர்த்தாவை எந்தவொரு வசனமும் பேச முடியாமல் விளாசி எடுத்து விட்டனர்.
பகிரங்க மன்னிப்பு: இந்நிலையில், ஆதிபுருஷ் படத்திற்கு வசனங்களை எழுதிய பாலிவுட் எழுத்தாளர் மனோஜ் முன்டஷிர் தனது வசனங்கள் இந்து மக்களின் மனங்களை புண்படுத்தி இருந்தால், கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

எந்தவொரு உள்நோக்கத்துடன் அப்படி வசனங்களை எழுதவில்லை என்றும் பகவான் அனுமன் நமக்கும் நம் சனாதன தர்மம் நிலைக்கவும் பலத்தை அருள வேண்டிக் கொள்கிறேன் என சரணாகதி அடைந்துள்ளார். ஜூலை 8ம் தேதியான இன்று அவர் பதிவிட்டுள்ள இந்த சமூக வலைதள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அனுமாரை பகைத்துக் கொண்டால் இப்படித்தான் அடிபணிய வைத்து விடுவார் உஷாரா இருங்க என நெட்டிசன்கள் அவரது போஸ்ட்டுக்கு கீழ் கமெண்ட்டுகளை பறக்க விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











