ஆதிபுருஷ் நடிகர்களின் சம்பளம் விவரம்.. பிரபாஸுக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா?
சென்னை : ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள ஆதிபுருஷ் திரைப்படம் 16ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உளளது.
ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில், ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பிரபாஸின் சம்பளம் : பாகுபலி படத்தின் மூலம் பான் இந்திய ஸ்டாரான பிரபாஸ் இந்த படத்திற்காக பெரும் தொகையை வாங்குகிறார். பிரபாஸுக்கு ரூ.100 முதல் 150 வரை கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே போல படத்தில் சீதா தேவியாக நடித்த கிருத்தி சனோனுக்கு ரூ. 3 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.
பல கோடி செலவு : மேலும், இப்படத்தில் லட்சுமணனாக நடித்த சன்னி சிங் சுமார் 1.5 கோடி ரூபாயும், ராவணனாக நடித்த சைஃப் அலிகானுக்கு சுமார் ரூ. 12 கோடி ரூபாயும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் வில்லன்களில் சைஃப் அலிகான் முதல் முதல் இடத்தில் இருக்கிறார். இப்படி பல கோடியில் எடுக்கப்பட்ட படத்தின் சம்பளம் மட்டுமே கோடிக்கு மேல் சென்றுள்ளது.
புக்கிங் தொடங்கியது : 550 கோடி செலவில் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி உள்ள ஆதிபுருஷ் திரைப்படத்தை வரும் வெள்ளியன்று திரையரங்கில் பார்க்க ரசிகர்கள் தங்களது புக்கிங்கை தொடங்கிவிட்டனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் ஆந்திராவில் பிரம்மாண்ட கட் அவுட், வண்ணவிளக்குகள் என மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கடவுளுக்கு சீட் : இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக திருப்பதி வந்த, நடிகர் பிரபாஸ், நாயகி கீர்த்தி சனோன், இயக்குனர் ஓம் ராவத் ஆகியோரின் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்து, படம் வெற்றிப்பெற வேண்டும் என வழிபாடு நடத்தினர். மேலும், ஆதிபுருஷ் படம் வெளியாகும் திரையரங்கில் ஒரு இருக்கை கடவுள் ஹனுமானுக்காக ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











