பொங்கலுக்கும் இல்லை.. சம்மருக்கும் இல்லை.. ஒரே அடியாய் ஓடிப்போன ஆதிபுருஷ்.. என்ன காரணம் தெரியுமா?
ஹைதராபாத்: இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், க்ரித்தி சனோன் நடிப்பில் ராமாயண கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஆதிபுருஷ் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், சமீபத்தில் வெளியான அந்த படத்தின் டீசரை பார்த்த நடிகர் பிரபாஸுக்கே அது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்கின்றனர்.
மேலும், ஆதிபுருஷ் படத்துக்கு எதிராக குவிந்த இமய மலை ட்ரோல்கள் காரணமாக படம் சம்மருக்கு தள்ளிப் போவதாக பேச்சுக்கள் எழுந்த நிலையில், தற்போது சம்மரையும் தாண்டும் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன.

சாஹோ ட்ரோல்
பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த எந்தவொரு படமும் ஓடவே இல்லை. பெரியளவில் ஃபிளாப் ஆகி வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் நெட்பிளிக்ஸ் இந்தோனேசியா வெளியிட்ட சாஹோ படத்தின் ஸ்கை டைவிங் காட்சியை சர்வதேச நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர். நியூட்டன் சமாதியில் இருந்து எழுந்து வந்து திட்டப் போறாருன்னுலாம் கலாய்த்து வருகின்றனர்.

ஆதிபுருஷ் ஆர்ப்பாட்டம்
பிரபாஸ் நடிப்பில் கார்ட்டூன் படம் போல உருவான ஆதிபுருஷ் படத்தின் டீசரை பார்த்து நெட்டிசன்கள் கழுவி ஊற்றிய நிலையில், தாங்கள் உருவாக்கிய படம் அவதாருக்கே டஃப் கொடுக்கும் விதமாக இருப்பதாக தியேட்டரில் டீசரை எல்லாம் வெளியிட்டு ஓம் ராவத் பண்ண ஆர்ப்பாட்டம் எதுவுமே பிசினஸ் ரீதியாக ஒர்க்கவுட் ஆகவே இல்லை.

கார் பரிசு
படமே இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் பில்டப் பண்ணியாவது ரிலீஸ் செய்து விடலாம் என நினைத்து 4 கோடிக்கு இயக்குநர் ஓம் ராவத்துக்கு டி சீரிஸ் நிறுவனம் சொகுசு கார் பரிசளித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், எப்படி பல்டி அடித்து பார்த்தும் பொங்கல் போட்டியில் ஆதிபுருஷ் இல்லை என்றானது.

பொங்கலும் இல்லை சம்மரும் இல்லை
பொங்கல் ரேஸில் வாரிசு படத்துடன் ஆதிபுருஷ் மோதும் என ஏகப்பட்ட பில்டப்புகள் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்துடன் சம்மருக்கு கூட ஆதிபுருஷ் படம் போட்டி போடாது என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக சிஜி ரீ ஒர்க் செய்யப்போவதாக கூறுகின்றனர்.

இன்னொரு 100 கோடி
இதுவரைக்குமே பல நூறு கோடி செலவில் சுட்டி டிவி கன்டென்ட்டை எடுத்து வைத்திருக்கின்றனர் என கலாய்த்து வந்த நிலையில், இன்னும் ஒரு 100 கோடி வீணடித்து VFX காட்சிகளை மாற்றப்போவதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக அந்த ராவணன் கேரக்டரையும்,அனுமன் கேரக்டரையும் மாற்றப் போவதாக கூறுகின்றனர். பாலிவுட்டில் கிளம்பிய கடும் எதிர்ப்பு தான் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆதிபுருஷ் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பே ஏப்ரல் மாதத்திற்கு மேல் தான் வரும் என தெரிகிறது.

சலார் மிரட்டும்
ஆதிபுருஷ் மீது பிரபாஸ் ரசிகர்களுக்கே இனிமேல் நம்பிக்கை இருக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால், கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் சலார் மற்றும் நடிகையர் திலகம் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாக உள்ள பிராஜக்ட் கே படங்கள் மீண்டும் பிரபாஸின் பாக்ஸ் ஆபிஸ் பலத்தை காட்டும் என்பது கன்ஃபார்ம்.


Click it and Unblock the Notifications











