Adipurush: சீதாவை ’இந்தியாவின் மகள்’ என்று எப்படி சொல்லலாம்.. சீறிய நேபாள மேயர்.. என்ன ஆச்சு?

மும்பை: பிரபாஸ், க்ரித்தி சனோன் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தை நேபாளத்தில் வெளியிட தடையாக இருந்த அந்த ஒரு வசனத்தை படக்குழு நீக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராமாயணக் கதையில் சீதை எனும் ஜானகி தேவி ஜனகருக்கு மகளாக கிடைத்தது நேபாளத்தில் தான் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், சீதையை இந்தியவின் மகள் என்கிற ஆதிபுருஷ் படத்தின் வசனத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

படத்தின் ட்ரைலரில் இடம்பெற்ற அந்த வசனத்தை நீக்காவிடில், நேபாளத்தில் ஆதிபுருஷ் படத்தை வெளியிட விட மாட்டோம் என மேயர் போட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

Adipurush particular dialogue removed after Nepal Mayor strict warning

ராமாயணக் கதை: வால்மீகி எழுதிய ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு ஏகப்பட்ட திரைப்படங்களும் சீரியல்களும் பல காலமாக புதிய புதிய தொழில்நுட்பத்துடன் உருவாகி வெளியாகி வருகிறது.

இயக்குநர் ஓம் ராவத் 2கே கிட்ஸ்களுக்கும் ராமாயணக் கதையை எடுத்துச் சொல்லும் விதமாக ஆதிபுருஷ் என்கிற பெயரில் இப்படியொரு பிரம்மாண்ட படத்தை உருவாக்கி உள்ளார். இந்த படத்தில் ராமராக பிரபாஸ் நடித்துள்ளார். சீதையாக பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் நடித்துள்ளார். வில்லன் ராவணனாக பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் நடித்துள்ளார். மேலும், பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைவ் ஆக்‌ஷன் படமாக இந்த படம் உருவாகி உள்ளது.

Adipurush particular dialogue removed after Nepal Mayor strict warning

நேபாள மேயர் எச்சரிக்கை: ஆதிபுருஷ் படத்தின் ட்ரைலரில் ஜானகி இந்தியாவின் மகள் என்கிற வசனம் இடம்பெற்றிருந்தது. இதை பார்த்த நேபாளத்தின் காத்மண்டுவின் மேயர் பலேன் ஷா நேபாளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள அந்த வசனத்தை நீக்காவிட்டால் ஆதிபுருஷ் படத்தை மட்டுமில்லை எந்தவொரு இந்தி படத்தையும் இங்கே ரிலீஸ் செய்ய முடியாது என எச்சரித்து போஸ்ட் போட்டிருந்தார்.

Adipurush particular dialogue removed after Nepal Mayor strict warning

ராமாயணக் கதையில் சீதை நேபாளத்தில் பிறந்தவர் எனக் குறிப்புகள் இருப்பதால், அவர் நேபாளத்தின் மகள் என சர்ச்சை கிளம்பியது.

வசனம் நீக்கம்: நேபாளத்தில் ஆதிபுருஷ் படத்தை வெளியிடாமல் போனால், அங்கிருந்து வரக்கூடிய வசூல் பாதித்து விடும் என்பதாலும், நேபாள ரசிகர்களும் ஆதிபுருஷ் படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காகவும் சர்ச்சையை கிளப்பிய அந்த வசனத்தை ஆதிபுருஷ் படக்குழு நீக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Adipurush particular dialogue removed after Nepal Mayor strict warning

ஆதிபுருஷ் படக்குழு அந்த வசனத்தை நீக்கிய நிலையில், நேபாளத்தின் தணிக்கை குழு ஆதிபுருஷ் படத்துக்கு சான்று வழங்கி படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி அளித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X