Adipurush: லேட்டான ஆதிபுருஷ் என்ட்ரி... வேலையை காட்டிய பிரபாஸ் ரசிகர்கள்... ரணகளமான தியேட்டர்!

ஹைதராபாத்: பிரபாஸ் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

ராமாயணத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை ஓம் ராவத் இயக்கியுள்ளார்.

3டி டெக்னாலஜியில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் படம் பார்க்க பிரபாஸ் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ஆதி புருஷ் படத்தின் ஷோ சொன்ன நேரத்தில் திரையிடப்படாததால் பிரபாஸ் ரசிகர்கள் தியேட்டரை அடித்து நொறுக்கியுள்ளனர்.

தியேட்டரில் ரகளை செய்த பிரபாஸ் ரசிகர்கள்:தெலுங்குத் திரையுலகின் டார்லிங் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் பிரபாஸ். பல சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்துள்ள பிரபாஸ், பாகுபலி ரிலீஸுக்குப் பின்னர் பான் இந்தியா சூப்பர் ஸ்டாரானார். இதனை பிரபாஸின் படங்கள் ரிலீஸாகும் போதெல்லாம் அவரது ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகிறார்கள். ஆனாலும் பாகுபலிக்குப் பிறகு ஒரு ஹிட் கூட கொடுக்க முடியாமல் திணறி வருகிறார் பிரபாஸ்.

 Adipurush: Prabhas fans damage theatre for not screening Adipurush movie on time

இதனால், ஆதிபுருஷ் படம் மீது ரொம்பவே நம்பிக்கை வைத்திருந்தார் பிரபாஸ். ஆனால், ஆதிபுருஷ் டீசர் வெளியானதுமே, இப்படத்தின் ரிசல்ட் தெரிந்துவிட்டது. சமீபத்தில் இந்தளவுக்கு ட்ரோலான டீசர்கள் எதுவும் கிடையாது. அவ்வளது தூரம் ஆதிபுருஷ் டீசரை வச்சு பங்கம் செய்தனர் பிரபாஸ் ரசிகர்கள். அதன் தொடர்ச்சியாக இப்போது மொத்த படமும் வெளியாகி நெட்டிசன்களிடம் வசமாக சிக்கியுள்ளது.

ஆஞ்சநேயருக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டு, அதில் காவி துண்டையும் போட்டு வைத்து வேடிக்கை காட்டி வருகிறது படக்குழு. இன்னொரு பக்கம் ஆதிபுருஷ் ஓடிக் கொண்டிருந்த தியேட்டரில் குரங்கு ஒன்று நுழைந்து அட்ராசிட்டி செய்தது. இதையெல்லாம் பிரபாஸ் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் ஹைதராபாத்தில் ஒரு ரகளையான சம்பவம் நடந்துள்ள்து. அங்குள்ள ஓர் திரையரங்கில் ஆதிபுருஷ் படம் திரையிட தாமதமாகியுள்ளது.

இதனால் கடுப்பான பிரபாஸ் ரசிகர்கள் தியேட்டர் வாசலில் நின்று கேட்டை ஆட்டியுள்ளனர். மேலும், அங்கிருந்த கண்ணாடிகளையும் அடித்து நெறுக்கியுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் ஆதிபுருஷ் படம் திரையிடப்படும் வரை திரையரங்க வளாகத்தில் நின்று ரகளை செய்துள்ளனர். இதனால் அங்கு சிலமணி நேரங்கள் ஒரே பரபரப்பாக காணப்பட்டது. அதன்பின்னர் ஆதிபுருஷ் படம் திரையிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.

பிரபாஸ் ரசிகர்கள் தியேட்டரில் ரகளை செய்யும் ரசிகர்களை பார்த்த நெட்டிசன்கள், சும்மாவே படம் முழுக்க வச்சு செய்துள்ளார் இயக்குநர் ஓம் ராவத். எப்படா படம் முடியும் என எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு மத்தியில், இவர்கள் இப்படி அவசப்படுகிறார்களே என கலாய்த்து வருகின்றனர். இந்தப் படத்தில் பிரபாஸுடன் கிருத்தி சனோன், சயிப் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X