படமே இன்னும் வரல.. அதுக்குள்ள 4 கோடிக்கு கார் பரிசா? ஆதிபுருஷ் படத்துக்கு செம பில்டப்பா இருக்கே!

மும்பை: பிரபாஸ் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள படம் ஆதிபுருஷ். அந்த படத்தின் இயக்குநர் ஓம் ராவத்துக்கு படத்தின் தயாரிப்பாளர் 4 கோடிக்கு சொகுசு கார் பரிசாக அளித்துள்ளது ஒட்டுமொத்த திரைத்துறையையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

விக்ரம் படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றியடைந்த நிலையில், கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜுக்கு கார் வாங்கி கொடுத்தார்.

வெந்து தணிந்தது காடு பெரும் வெற்றி பெற்றதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கெளதம் மேனனுக்கு புல்லட் ஒன்றை பரிசளித்தார். இந்நிலையில், படமே வெளியாகாத நிலையில், ஓம் ராவத்துக்கு இத்தனை கோடிக்கு சொகுசு கார் கிடைத்துள்ளது அனைவரது கவனத்தையும் திருப்பி உள்ளது.

புஸ்ஸான எதிர்பார்ப்பு

புஸ்ஸான எதிர்பார்ப்பு

பிரபாஸ் ராமராக நடிக்கிறார் என்றதுமே ஆதிபுருஷ் படம் பாகுபலியையே தூக்கி சாப்பிடும் என நம்பிக் கொண்டிருந்த பிரபாஸ் ரசிகர்களே காண்டாகும் அளவுக்கு அனிமேஷன் திரைப்படமாக ஆதிபுருஷ் டீசர் சமீபத்தில் வெளியானது. டீசரில் இராவணனாக நடித்த சைஃப் அலி கான் ஏதோ அல்கொய்தா தீவிரவாதி மாதிரி இருக்காரே என கடுமையான ட்ரோல்கள் பறந்தன.

அசுர முட்டு

அசுர முட்டு

நீங்க சாதாரண மொபைல் போனில் பார்த்தால் எல்லாம் டீசர் நல்லா இருக்காது. தியேட்டருக்கு வந்து 3டியில் பார்த்து விட்டு பேசுங்க என சில இடங்களில் ஸ்பெஷல் ஷோவெல்லாம் போட்டு ஆதிபுருஷ் 3டி டீசர் வேற லெவல் என படக்குழுவினர் பெரிய அளவில் அசுர முட்டுக் கொடுத்து புரமோஷன் செய்து வந்தனர்.

பிரபாஸ் கடுப்பாகிட்டாரு

பிரபாஸ் கடுப்பாகிட்டாரு

ஆதிபுருஷ் டீசரை பார்த்த பிறகு இயக்குநர் ஓம் ராவத்தை பிரபாஸ் மிரட்டி கூப்பிட்ட வீடியோவை ஷேர் செய்து பிரபாஸின் லுக்கை பார்த்தாலே தெரியுது மனுஷன் எந்த அளவுக்கு காண்டாகி இருப்பார் என்றும் நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்தனர். ட்ரோல்கள் எப்படி பறந்தாலும், பிரபாஸுக்காக படத்தை பார்ப்போம் என பிரபாஸ் ரசிகர்கள் தொடர்ந்து ஆதிபுருஷுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

4 கோடிக்கு கார் பரிசு

4 கோடிக்கு கார் பரிசு

இந்நிலையில், ஆதிபுருஷ் படத்துக்கு மேலும் ஹைப் கூட்ட இயக்குநர் ஓம் ராவத்துக்கு படம் ரிலீஸ் ஆகும் முன்னமே தயாரிப்பாளர் பூஷன் குமார் 4 கோடி ரூபாய்க்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் என பரபரப்பான தகவல்களை பாலிவுட் மீடியாக்கள் தெரிவித்துள்ளன.

சிகப்பு கலர் ஃபெராரி

சிகப்பு கலர் ஃபெராரி

சிகப்பு நிறத்தில் கப்பல் மாதிரி இருக்கும் ஃபெராரி காரை டி சீரிஸ் நிறுவன தயாரிப்பாளர் பூஷன் குமார் ஆதிபுருஷ் பட இயக்குநர் ஓம் ராவத்துக்கு பரிசாக வழங்கி உள்ளார் என்றும், ஓம் ராவத் அந்த காரை ஓட்டிச் செல்லும் வீடியோக்களையும் இணையத்தில் ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பொங்கல் போட்டி

பொங்கல் போட்டி

விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்களுடன் வரும் பொங்கலுக்கு போட்டியாக பிரபாஸின் ஆதிபுருஷ் வெளியாக காத்திருக்கிறது. இந்த படத்தில் ராமராக பிரபாஸ் நடித்துள்ளார். சீதையாக க்ரித்தி சனோனும், ராவணனாக சைஃப் அலி கானும் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X