கொரோனா ஊரடங்கு...பிரபாசின் ஆதிபுருஷ் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தம்

மும்பை : டைரக்டர் ஓம் ராவத் இயக்கும் பிரம்மாண்ட படம் ஆதிபுருஷ். பிரபாஸ், சைஃப் அலி கான் நடிக்கும் இந்த படம் இந்திய அளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது. இந்த படத்தில் ராமர் கேரக்டரில் பிரபாஸ் நடிக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஆதிபுருஷ் படத்தின் லேட்டஸ் அப்டேட் ஒன்றை வழங்கி உள்ளார் டைரக்டர் ஓம் ராவத். புராண 3 டி படமான ஆதிபுருஷ் படத்தின் 30 சதவீதம் படப்பிடிப்புக்கள் முடிவடைந்து விட்டது.

Adipurush shoot has been halted temporarily due to the lockdown

பிப்ரவரி துவக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. மும்பையில் ப்ரீ புரொடெக்ஷன் வேலைகள் நடைபெற்றது. மகாராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.

பொதுவாகவே பிரபாஸ் நடிக்கும் பிரம்மாண்ட படங்களின் பணிகள் நிறைவடைய அதிக காலம் எடுக்கும். அதிலும் ஆதிபுருஷ், பாலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கலாச்சாரம் சார்ந்த படம். இந்த படம் 2022 ஆகஸ்டில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கிர்த்தி சனோன் சீதா கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் மோஷன் கேப்சர் டெக்னாலஜி அதிக அளவில் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த பிரம்மாண்ட படத்தை டி சீரிஸ் கிருஷன் குமார் மற்றும் பூஷன் குமார் தயாரிக்க உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X