Adipurush : தியேட்டரில் கடவுள் ஆஞ்சநேயருக்கு தனி சீட்.. ஆதிபுருஷ் படக்குழு அறிவிப்பு!
சென்னை : கடவுள் ஆஞ்சநேயருக்காக திரையரங்கில் தனி இருக்கை கொடுக்கப்படும் என்று ஆதிபுருஷ் படக்குழு அறிவித்துள்ளது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் ஜூன் 16ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதில், பிரபாஸ், சைப் அலி கான், கீர்த்தி சனோன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆதிபுருஷ் : ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள படம் ஆதிபுருஷ் . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த வாரம் திரையரங்கில் வெளியாக உள்ளது. ஆதிபுருஷ் படத்தின் ட்ரெய்லர் வெளியான 16 மணி நேரத்தில் அனைத்து மொழிகளிலும் 6 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்தது.
அமேசான் ஓடிடியில் : இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் படத்தின் ஓடிடி உரிமை பல கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமேசான் பிரைம் இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியுள்ளது. படம் வெளியான 50 நாட்களுக்கு பின் இத்திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியாகும்.

ஆஞ்சநேயருக்கு தனி சீட் : இந்நிலையில், ஆதிபுருஷ் படத்தின் ஒவ்வொரு காட்சியின் போதும், திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விட போவதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில், அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் விசுவாசத்தின் உருவமாக விளங்கும் அனுமனுக்கு மிகுந்த மரியாதையுடன் கூடிய பணிவான அஞ்சலி. ஆதிபுருஷ் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு தியேட்டரிலும் ஒரு இருக்கையை ஒதுக்குகிறோம் என்று பதிவிடப்பட்டுள்ளது.
கிண்டலடிக்கும் பேன்ஸ் : இந்த போஸ்டரை பார்த்த நெட்டிசன்ஸ் சிலர், உண்மையான இராமாயணம் நிகழ்ந்த போது அனுமன் அதை நேரிலேயே பார்த்திருப்பாரே இதை திரையரங்கில் வேறு பார்க்க வேண்டுமா என்றும், சிலர் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











