Adipurush: பொன்னியின் செல்வனுக்கு ரிவெஞ்சா.. போனியாகாத ஆதிபுருஷ்.. எல்லா இருக்கையும் அனுமாருக்கா?
சென்னை: பிரபாஸ் நடித்துள்ள லைவ் ஆக்ஷன் திரைப்படமான ஆதிபுருஷ் வரும் ஜூன் 16ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அந்த படத்துக்கு கொஞ்சம் கூட வரவேற்பே இல்லை என்பது பிரபாஸ் ரசிகர்களை மட்டுமின்றி டோலிவுட் மற்றும் பாலிவுட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் படத்துக்கு தமிழ்நாட்டை தாண்டி பக்கத்து மாநிலங்களில் வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், அதற்கான ரிவெஞ்சாக பிரபாஸ் படத்துக்கு புக்கிங் நடைபெறவில்லையா என கேள்விகள் எழுந்துள்ளன.

பாகுபலியை கொண்டாடினார்கள்: ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வெளியான பாகுபலி படத்தை தமிழ் படத்தை போலவே ரசிகர்கள் இங்கேயும் கொண்டாடினார்கள். பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது.
ஆனால், சமீப காலமாக தெலுங்கில் ஹிட்டாகும் பல படங்கள் இங்கே வசூலை குவிக்க தவறி வருகிறது. அதற்கு காரணமே கோலிவுட் படங்களை டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் சுத்தமாக மதிக்காதது தான் என்கின்றனர்.
பொன்னியின் செல்வனை கண்டுக்கல: சோழர்களின் வரலாற்று காவியமாக உருவான பொன்னியின் செல்வன் படம் பிரம்மாண்டமான மல்டி ஸ்டார் படமாக உருவான நிலையிலும், அதனை கோலிவுட் படம் என்றே கருதி டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் அந்த படத்தை யாருமே பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
மேலும், பிரபாஸ் நடித்த பாகுபலி படத்தை வைத்து பொன்னியின் செல்வனை டோலிவுட் ரசிகர்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து சோஷியல் மீடியாவில் சண்டை போட்டனர்.
போனியாகாத ஆதிபுருஷ்: இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை ஆதிபுருஷ் உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் புக்கிங் தொடங்கிய நிலையில், இன்னமும் அந்த படத்திற்கான டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் ஆர்வமே காட்டவில்லை.
டோலிவுட் மற்றும் பாலிவுட் ரசிகர்கள் பல தியேட்டர்களை ஹவுஸ்ஃபுல் ஆக்கி வரும் நிலையில், தமிழ்நாட்டு திரையரங்குகள் அனைத்தும் புக்கிங் தொடங்கி பல மணி நேரம் ஆகியும் இன்னமும் முழுவதுமாக பச்சை வண்ணத்திலேயே புக் ஆகாமல் பல் இளித்துக் காட்சி தருகின்றன.
ராமாயணக் கதை இந்திய இதிகாசமாக இருந்தாலும், பிரபாஸ் படத்தை பார்க்கக் கூடாது என்கிற நிலையிலேயே கோலிவுட் ரசிகர்கள் அதனை புறக்கணித்து விட்டனரா? என்கிற கேள்வி கிளம்பி உள்ளது.
முன்னதாக தி கேரளா ஸ்டோரியும் இங்கே வியாபாரம் ஆகவில்லை. தற்போது ஆதிபுருஷ் தமிழ்நாட்டில் ஓடவில்லை என்றால், அதன் பிறகு வெளியாகும் பக்கத்து ஸ்டேட் பிரம்மாண்ட படங்களுக்கும் இதே புறக்கணிப்பு நிலை தான் உருவாகும் என்றும் கூறுகின்றனர். மேலும், அனுமாருக்காக அனைத்து சீட்களையும் தமிழ்நாடு தியேட்டர்கள் காலியாக வைத்திருப்பதாக கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











