கமல் சிபாரிசா.. திடீரென அடிபடும் 2 பிரபல வாரிசு நடிகர்களின் பெயர்கள்.. பிக்பாஸுக்கு வருகிறார்களா?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் ஆவதற்கு முன்னதாக ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் போட்டியாளர்கள் குறித்து நிலவி வருவது வழக்கமான ஒன்று தான்.
பதினாறு போட்டியாளர்களா? அல்லது இந்த முறை பன்னிரண்டு போட்டியாளர்களா? என்கிற புது குழப்பம் வேற வந்துள்ளது.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிரபல நடிகர்கள் இருவரின் மகன்களின் பெயர்கள் புதிதாக போட்டியாளர்கள் பட்டியலில் அடிபட தொடங்கி இருக்கிறது.

96 ஹீரோ
என்னடா 96 ஹீரோ என்றதும் விஜய்சேதுபதி தான் வரப் போகிறாரோ என்று நினைத்து விட வேண்டாம். 96 படத்தில் இளம் விஜய்சேதுபதியாக நடித்த நம்ம எம்.எஸ். பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் பிக் பாஸ் வீட்டுக்கு வரப் போகிறார் என்ற பேச்சுக்கள் இப்போ அடிபடத் தொடங்கி இருக்கின்றன.

கடாரம் கொண்டான் ஹீரோ
இப்பவும் விக்ரம் என கன்ஃபியூஸ் ஆகாதீங்க, கடாரம் கொண்டான் படத்தில் நம்ம அக்ஷரா ஹாசனின் ஜோடியான அபி ஹாசனிடமும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக தகவல் கசிந்துள்ளன. பிரபல நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

கமல் சிபாரிசா
இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஹீரோக்கள் யாரும் சிக்காத நிலையில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனே இந்த இரு வாரிசு நடிகர்களின் பெயர்களையும் சிபாரிசு செய்துள்ளாரா? என்ற கேள்விகளும் சமூக வலைதளங்களில் எழுந்து வருகின்றன. ஏனென்றால் எம்.எஸ். பாஸ்கர் மற்றும் நாசர் உடன் கமலுக்கும் நீண்ட கால நட்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது தயாரிப்பு
அதனால் தான் தனது தயாரிப்பில் உருவான கடாரம் கொண்டான் படத்தில் நடிகர் நாசரின் மகனை கமல்ஹாசன் அறிமுகம் செய்திருந்தார் என்றும் கூறப்படுகிறது. நல்ல வேளை அக்ஷரா ஹாசன் சில படங்களில் கமீட் ஆகி உள்ளார் இல்லை என்றால் அவரது பெயரும் இந்த பிக் பாஸ் போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும்.

வருவார்களா?
இந்த இருவரில் ஒருவர் பிக் பாஸ் வீட்டிற்கு வரப் போகிறாரா? இல்லை இருவருமா? இல்லை இருவருமே இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், இரண்டு பேரில் யார் வந்தாலும், டைட்டிலை வெற்றி பெற தகுதியான போட்டியாளர்களாக நிச்சயம் மற்றவர்களுக்கு டஃப் கொடுப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்.


Click it and Unblock the Notifications











