தாய் மாமான்னா இப்படி இருக்கணும்.. மார்புக்கு கீழே மருமகளின் பெயரை பச்சைக் குத்திய ’96’ ஹீரோ!

சென்னை: குணசித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு ஐஸ்வர்யா பாஸ்கர் மற்றும் ஆதித்யா பாஸ்கர் என 2 குழந்தைகள் உள்ளனர். விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தில் இளம் வயது ராம் ஆக நடித்து கெளரி ஷங்கரை ரொமான்ஸ் செய்த ஆதித்யா பாஸ்கர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தனது சகோதரி ஐஸ்வர்யா பாஸ்கருக்கு கடந்த ஆண்டு குழந்தை பிறந்த நிலையில், மருமகளின் பெயரை தாய் மாமன் பச்சைக் குத்தியுள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

டப்பிங் ஆர்ட்டிஸ்ட், சீரியல் நடிகர், சினிமாவில் காமெடி நடிகனாக வலம் வந்த எம்.எஸ். பாஸ்கருக்கு 67 வயதாகிறது. சமீப காலமாக குணசித்திர கதாபாத்திரத்திலும் வில்லத்தனத்திலும் தனது நடிப்பால் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

adithya bhaskar ms bhaskar

லப்பர் பந்து படத்துக்கு முன்னதாக ஹரிஷ் கல்யாணுக்கு வெற்றியை தந்த பார்க்கிங் படத்தில் எம்.எஸ். பாஸ்கரின் நடிப்பு மிரட்டலாக இருந்தது. அவரது மகள் ஐஸ்வர்யா பாஸ்கர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக உள்ள நிலையில், மகன் ஆதித்யா பாஸ்கர் ஹீரோவாகவும், துணை நடிகராகவும் படங்கள், வெப்சீரிஸ் என நடித்து வருகிறார்.

96 படத்தில் அறிமுகம்: நடிப்பு ரத்தத்திலேயே ஊறி கிடக்கும் நிலையில், பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்து சூப்பர் ஹிட்டான 96 படத்தில் இளம் வயது ராம் கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் தான் ஆதித்யா பாஸ்கர். அந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்த நிலையில், வெந்து தணிந்தது காடு, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஹாட் ஸ்பாட் மற்றும் ரெபல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மீம் பாய்ஸ், பாவக் கதைகள் என ஓடிடியிலும் ஒரு ரவுண்டு வருகிறார் ஆதித்யா பாஸ்கர்.

டாட்டூ போட்ட தாய்மாமா: தனது சகோதரி ஆதித்யா பாஸ்கருக்கு திருமணமாகி அழகான பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அந்த குழந்தைக்கு அகீரா என பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது மருமகளின் பெயரை தனது மார்புக்கு கீழே பச்சைக் குத்திக் கொண்ட ஆதித்யா பாஸ்கர் அந்த டாட்டூவை காட்டியபடியும் மருமகளை கையில் ஏந்திக் கொண்டு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். என்னோட மருமகள் இதை படித்துப் பார்க்கும் அளவுக்கு வளர்ந்த பின்னர் என்ன ரியாக்ட் பண்ணுவான்னு பார்க்க ரொம்பவே ஆர்வமாக உள்ளேன் எனக் கூறியுள்ளார்.

adithya bhaskar ms bhaskar

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X