மீண்டும் கைவரிசையை காட்டிய தமிழ் ராக்கர்ஸ்.. ஆதித்ய வர்மா, ஃப்ரோஸன் 2 லீக்!
சென்னை: த்ருவ் விக்ரம் நடிப்பில் நேற்று வெளியான ஆதித்ய வர்மா மற்றும் ஹாலிவுட் படமான ஃப்ரோஸன் 2 ஆகிய இரு படங்களும் தமிழ் ராக்கர்ஸில் லீக் ஆகியுள்ளன.
தமிழில் வெளியாகும் படங்கள் முதல் நாளிலேயே தமிழ் ராக்கர்ஸுக்கு இரையாவது தொடர் கதையாகி வருகிறது.
படம் வெளியான முதல் நாள் இரவே இப்படி ஆன்லைனில் பைரசியாக வெளியாவது தயாரிப்பாளர்களை பெருமளவில் பாதித்து வருகிறது.

ஆதித்ய வர்மா
அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா படம் நேற்று வெளியானது. த்ருவ் விக்ரம் நடிப்பில், கிரிசாயா இயக்கத்தில் ஆதித்ய வர்மா ஒரு தரமான நேர்மையான ரீமேக் என படத்தை பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர். த்ருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள இந்த படமும், முதல் நாளிலேயே தமிழ் ராக்கர்ஸில் கசிந்துள்ளது.

ஹாலிவுட்டையும் விட்டு வைக்கல
டிஸ்னி தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஃப்ரோஸன் 2 திரைப்படம் தமிழ் டப்பிங்கில் நேற்று வெளியானது. ஷ்ருதி ஹாசன் எல்சா கதாபாத்திரத்திற்கும் டிடி எனும் திவ்ய தர்ஷினி ஆன்னா கதாபாத்திரத்திற்கும் குரல் கொடுத்துள்ளனர். இந்த படமும், வெளியான முதல் நாளிலேயே தமிழ் ராக்கர்ஸில் வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளர்கள் கவலை
தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் பைரஸி தளங்களில் இப்படி முதல் நாளே படம் லீக்கானால், அதனை மக்கள் பலரும் டவுன்லோடு செய்து வீட்டிலேயே பார்த்து விடுகின்றனர். இதனால், தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் கூட்டம் பெருமளவில் குறைவதால், கோடிக் கணக்கில் பணத்தை கொட்டி படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் சினிமா துறையை விட்டு காணாமல் போகும் நிலை உருவாகி வருகிறது.

தடுக்க முடியாதா?
ஆபாச இணையதளங்களை பெருமளவில் இந்தியாவில் அதிரடியாக தீர்ப்பு வழங்கி தடை செய்தது போல, புதிய படங்களை திருட்டுத் தனமாக எடுத்து வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் போன்ற ஆன்லைன் பைரஸி தளங்களை தடை செய்ய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், இதற்கான தீர்வு எப்போது கிடைக்குமோ?


Click it and Unblock the Notifications











