For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆதித்யா வர்மாவில் துருவ் அற்புதமாக நடித்துள்ளார் - பிரியா ஆனந்த்

|

சென்னை: துருவ் ஒரு வித்தியாசமான நடிகர். அவருடன் நடித்தது எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது என்று நடிகை பிரியா ஆனந்த் கூறியுள்ளார். ஆதித்யா வர்மா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரியா ஆனந்த், நடிகர் விக்ரமை நாம் ஒரு நடிகராக அனைவரும் அறிவோம். ஆனால் அவர் மிகவும் அற்புதமான ஸ்பெஷல் தந்தை என்பதை நான் அவரிடமே பல முறை கூறியிருக்கிறேன் என்று புகழ்ந்தார்.

தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமானாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் ஒரு முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் பிரியா ஆனந்த். இவர் ஒரு கவர்ச்சி, மாடர்ன், ஹோம்லி என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும், பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.

Adithya Varma audio launch press meet Priya Anand speech

கடந்த 2009ஆம் ஆண்டு வாமனன் திரைப்படம் மூலம் அறிமுகமானவர். ஜெய், சந்தானம், ஊர்வசி உள்ளிட்டோர் நடித்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

பிரியா ஆனந்த் தமிழ் மற்றும் தெலுங்கில் சரளமாக பேசக்கூடியவர். அதோடு ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மராத்தி, ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர். அவருக்கு, தான் ஒரு சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை சிறு வயது முதலே இருந்து வருகிறது. ஆனால், சினிமாவில் நடிப்பார் என்பதை சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை.

பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்.. பெற்றோர் சம்மதம்.. விரைவில் டும் டும் டும்.. ரசிகர்கள் ஹேப்பி!

தற்போது விக்ரம் மகன் துருவ் அறிமுகமாகும் ஆதித்யா வர்மா திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிரியா ஆனந்த். தெலுங்கு மற்றும் கன்னட படத்திலும், அதே கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இரு மொழிகளை காட்டிலும் தமிழ் வெர்ஷனில் கூடுதல் சிறப்பாக நடித்துள்ளார்.

https://tamil.filmibeat.com/news/kannada-biggboss-season-5-constants-love-became-success-064283.html

ஆதித்ய வர்மா திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் சத்யம் சினிமாஸில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விக்ரம், துருவ் மற்றும் பலரும் இப்படத்தில் பிரியாவின் நடிப்பை பற்றி பெரிதும் பாராட்டினார்.

மிகவும் அழகான, கவர்ச்சிகரமான ஒரு உடையில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரியா ஆனந்த், இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசிய போது இப்படத்தில் நடித்தது மிகவும் வித்தியாசமாக இருந்தது என்றார். நடிகர் விக்ரமை நாம் ஒரு நடிகராக அனைவரும் அறிவோம். ஆனால் அவர் மிகவும் அற்புதமான ஸ்பெஷல் தந்தை என்பதை நான் அவரிடமே பல முறை கூறியிருக்கிறேன். அப்பா-மகன் என்ற அவர்களின் உறவு மற்றவர்களை விட மிகவும் இனிமையானது.

https://tamil.filmibeat.com/news/kannada-biggboss-season-5-constants-love-became-success-064283.html

மேலும் நான் பல ஸ்டார் நடிகர்களின் மகன்களோடு நடித்துள்ளேன். ஆனால் துருவ் ஒரு வித்தியாசமானவர். அவருடன் இப்படத்தில் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. அவர் மிகவும் திறமையான நடிகர். அவரின் தந்தை அவருக்கு அப்படியே அவரின் நடிப்பு திறமையை கொடுத்துள்ளார் என்று பாராட்டினார். அவருக்கு மேலும் பல நல்ல வாய்ப்புகள் இந்த சினிமா உலகில் கிடைக்கவிருக்கிறது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் பெரும்பாலான தெலுங்கு சினிமாவில் நடித்துள்ளார். பிரியா ஆனந்த் மேலும் பல தமிழ் சினிமாக்களில் நடிக்க வேண்டும் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் வேண்டுகோள்.

English summary
Dhruv is a different actor. Actress Priya Anand was speaking at the Audio launch of Adithya Varma that, I had a good experience playing with him. Also, the actor Vikram we all know as an actor. But I have told him many times that he is the most wonderful special father,said Priya Anand.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more