வாவ்.. முதல் வாரத்திலேயே செமயா கல்லா கட்டிய ஆதித்யவர்மா.. எவ்ளோன்னு தெரியுமா?

Recommended Video

Adithya Varma Box Office | Dhruv Vikram | Vikram

சென்னை: ஆதித்யவர்மா படத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படம் அர்ஜுன் ரெட்டி. தெலுங்கில் செம ஹிட்டாக இந்தியில் கபிர் சிங் என்ற பெயரில் ரிலீஸானது.

இதனை தொடர்ந்து தமிழில் ஆதித்யவர்மா என்ற பெயரில் கடந்த வாரம் ரிலீஸானது. இந்தப் படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமானார்.

பாராட்டு

பாராட்டு

ஆதித்யவர்மா படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஆனாலும் துருவ் விக்ரமின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

முதல்வார கலெக்ஷன்

முதல்வார கலெக்ஷன்

இந்நிலையில் ஆதித்யவர்மா படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதல் வாரத்தில் எவ்ளோ வசூல் செய்திருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது படக்குழு மகிழ்ச்சியடையும் வகையிலேயே ஆதித்யவர்மா படத்தின் முதல் வார கலெக்ஷன் இருந்துள்ளது.

முதல் 3 நாட்கள்

முதல் 3 நாட்கள்

முதல் நாளில் மட்டும் ஆதித்யவர்மா படம் 34 லட்சம் ரூபாய் வசூல் செய்திருக்கிறது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இப்படம் ஒவ்வொரு நாளும் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.

கலெக்ஷனில் டாப்

கலெக்ஷனில் டாப்

அதன்படி முதல் வார இறுதியில் 98 லட்சம் ரூபாயை இப்படம் குவித்திருக்கிறது. ஃபுரோஸன் 2 படம் முதல் வாரத்தில் 91 லட்சம் ரூபாய் வசூல் செய்திருக்கிறது. அதன் அடிப்படையில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் ஆதித்யவர்மா படம் கலெக்ஷனில் டாப்பில் உள்ளது.

ரூ.12 லட்சம்

ரூ.12 லட்சம்

இருப்பினும், திங்கள் கிழமை ஆதித்யவர்மா வசூலில் ஒரு சிறிய வீழ்ச்சியை எதிர்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் நான்காவது நாளில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் சுமார் 12 லட்சம் ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது.

சென்னையில் டாப்

சென்னையில் டாப்

இந்த படம் நான்கு நாட்கள் ஓடியதில் இருந்து சென்னை பாக்ஸ் ஆபிஸிலிருந்து ரூ 1.10 லட்சம் வசூலித்துள்ளது. இதனிடையே ஆதித்யா வர்மா அண்மைக்காலத்தில் ஒரு அறிமுக ஹீரோவின் சிறந்த படங்களில் ஒன்றாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X