விக்ரம் பையன்னா சும்மாவா.. ட்விட்டரை தெறிக்கவிடும் ஆதித்ய வர்மா!

Recommended Video

நா தளபதி ரசிகன் | ACTOR DHRUV VIKRAM | ADITHYA VARMA TEAM INTERVIEW | V-CONNECT | FILMIBEAT TAMIL

சென்னை: விக்ரம் மகன் த்ருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா இன்று ரிலீசாகியுள்ளது.

நடிகர் விக்ரம் படத்திற்கு எப்படியொரு ஓபனிங் இருக்குமோ அந்த அளவுக்கு த்ருவ் விக்ரமுக்கு ஓபனிங் கிடைத்துள்ளது.

விக்ரம் ரசிகர்கள் மட்டுமின்றி, விஜய் ரசிகர்கள், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் என பல நடிகர்களின் ரசிகர்கள் த்ருவ் விக்ரமின் அறிமுக படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து ட்விட்டரில் ஆதித்ய வர்மா ஹேஷ்டேகுகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அர்ஜுன் ரெட்டி

அர்ஜுன் ரெட்டி

விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்தியளவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. ஹிந்தியில் ஷாகித் கபூர் நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டியின் ரீமேக்கான கபீர் சிங் படம் அதற்கு மேல் வசூலை குவித்து பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. இந்நிலையில், தமிழில் அந்த படத்தின் ரீமேக்கான ஆதித்ய வர்மா படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார்.

திருவிழா கொண்டாட்டம்

மாஸ் நடிகர்களுக்கு தியேட்டர்களில் FDFS கொண்டாட்டம் எப்படி நடக்குமோ அதே அளவுக்கான கொண்டாட்டம் த்ருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா படத்திற்கு திரையரங்குகளில் இன்று காலை காட்சி துவங்கும் முன் கொண்டாடப்பட்டது. நடிகர் விக்ரம் மற்றும் த்ருவ் விக்ரம் ரசிகர்களுடன் படத்தை பார்த்து அந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

மாஸ் ஓபனிங்

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் த்ருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா அதிக திரையரங்குகளில் இன்று திரையிடப்படுகிறது. த்ருவ் விக்ரமுக்கான அறிமுகப் படத்திற்கு தேவையான மாஸ் ஓபனிங் கிடைத்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 400 திரையரங்குகளிலும், கேரளாவில் 100 திரையரங்குகளிலும் ஆதித்ய வர்மா கிராண்ட் ரிலீஸ் ஆகியுள்ளது.

டிரெண்டிங்

ட்விட்டர் டிரெண்டிங்கை நேற்று காலை முதலே பிடித்து வைத்துள்ள ஆதித்ய வர்மா ரசிகர்கள், இன்றும் ஆதித்ய வர்மா இன்று ரிலீஸ், ஆதித்ய வர்மா, த்ருவ் விக்ரம் என மூன்று ஹேஷ்டேகுகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள்

சியான் விக்ரம் மற்றும் நடிகர் விஜய் இடையே பயங்கர நட்பு இருக்கிறது. அதன் எதிரொலியாக த்ருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ஹேஷ்டேகுகளை டிரெண்ட் செய்தும், ஆதித்ய வர்மா படம் வெற்றி பெறவும் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X