துருவ் விக்ரம் ஜோடிக்கு கவுன் மாட்டி விட்ட காதலன்.. ஒரே ரொமான்ஸ் தான்.. டிரெண்டாகும் பிக்ஸ்!
மும்பை: சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான ஆதித்யா வர்மா படத்தில் அப்பாவி ஹீரோயினாக நடித்து படம் முழுக்க பல முத்தக் காட்சிகளில் தாராளம் காட்டியிருந்த பாலிவுட் நடிகை பனிடா சந்து தனது காதலரை ஒரு வழியாக இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்து விட்டார்.
பிரபல பாடகர் ஏபி தில்லோன் என்பவரைத் தான் பனிடா சந்து காதலித்து வரும் நிலையில், இன்ஸ்டாகிராமில் இருவரும் ரொமான்ஸ் செய்யும் படு நெருக்கமான போட்டோக்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களை வாய் பிளக்க செய்துள்ளது.

படுக்கையில் இருந்து காதலன் தலையில் முட்டுவது, பனிடா சந்து அணிந்திருந்த கவுன் ஜிப்பை ஏபி தில்லோன் போடுவது உள்ளிட்ட போட்டோக்கள் வெளியாகி லைக்குகளை அள்ளி உள்ளன.
ஆதித்யா வர்மா ஹீரோயின்: நடிகர் விக்ரமின் மகன் கோலிவுட்டில் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதலில் பாலா இயக்கத்தில் வர்மா டைட்டிலில் உருவான அந்த படத்தில் மேகா சவுத்ரியுடன் முத்த மழை பொழிந்து நடித்த நிலையில், அந்த படம் சுமாராக இருப்பதாக சொல்லி விட்டு, அடுத்ததாக கிரிசாயா இயக்கத்தில் உருவான ஆதித்யா வர்மா படத்தில் நடித்திருந்தார்.
அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் படமான அக்டோபர் படத்தில் நடித்து பிரபலமான பனிடா சந்து நடித்திருந்தார்.

பனிடா சந்து காதலர்: 26 வயதான பனிடா சந்து அதன் பின்னர் தமிழ் படங்களில் நடிக்கவே இல்லை. சர்தார் உத்தம், டெடக்டிவ் ஷெர்தி உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்துள்ள பனிடா சந்து தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலரை அறிமுகம் செய்துள்ளார்.
பாடகர் ஏபி தில்லோன் மற்றும் பனிடா சந்து இருவரும் நெருக்கமாக பழகி வருவதாகவும் டேட்டிங் செய்து வருவதாகவும் சில மாதங்களாகவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் பனிடா சந்து.
கவுன் மாட்டிவிடும் காதலர்: படுக்கையில் பனிடா சந்து முட்டிப் போட்டு நெருங்கி வர, தரையில் அமர்ந்துக் கொண்டு காதலர் அண்ணாந்து பார்க்கும் ரொமாண்டிக் புகைப்படம் மற்றும் பாத்ரூமில் சரக்கு கிளாஸ் உடன் ஏபி தில்லோன் பனிடாவை பார்ப்பது, பனிடா லிப்ஸ்டிக் போடுவது, பனிடாவின் கவுனை அணிவித்து அதற்கு ஜிப் போடுவது உள்ளிட்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் இருவரும் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளனர்.


Click it and Unblock the Notifications