எதிர்பார்ப்பு இல்லையா.. ஏன் தள்ளிப்போனது ஆதித்ய வர்மா?

Recommended Video

Adithya Varma Making Video | Dhruv Vikram | Gireesaaya

சென்னை: விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ஆதித்ய வர்மா, வரும் நவம்பர் 8ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் ரிலீஸ் தேதி நவம்பர் 21ம் தேதிக்கு தள்ளிப்போயுள்ளது.

கிரிசாயா இயக்கத்தில் துருவ் விக்ரம், பானிடா சந்து, பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஆதித்ய வர்மா படத்துக்கு தணிக்கைக் குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான ஆதித்ய வர்மா படம், துருவ் விக்ரமுக்கு நல்ல ஓபனிங் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போ ரிலீஸ்

நாளை நவம்பர் 8ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த துருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா திரைப்படம் இன்னும் இரு வாரங்கள் கழித்து நவம்பர் 21ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு, சியான் விக்ரம் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்த தேதியிலாவது வெளியாகுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

எதிர்பார்ப்பு இல்லையா

எதிர்பார்ப்பு இல்லையா

விஜய்தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படம் இந்தியளவில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. தமிழ் ரசிகர்கள் பலரும் அர்ஜுன் ரெட்டி படத்தை பார்த்து விட்டனர். அதன் பிறகு, பாலிவுட்டில் ஷாகித் கபூர் நடிப்பில் வெளியான கபீர் சிங்கும் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டடித்தது. ஆனால், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ஆதித்ய வர்மா படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிதாக இல்லாத காரணத்தால், சரியான ரிலீசுக்காக படக்குழு ரிலீஸ் தேதியை தள்ளிப்போட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏ சான்றிதழ்

ஏ சான்றிதழ்

அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் படங்களை தொடர்ந்து ஆதித்ய வர்மா படத்திற்கும் ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் தனது முதல் படத்திலேயே ஏ சான்றிதழ் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு, இந்தியில் பெற்ற அதே அளவு வெற்றி தமிழிலும் துருவுக்கு கிடைக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

எந்த படம் ரிலீஸ்

எந்த படம் ரிலீஸ்

வெள்ளிக்கிழமையான நாளை ஆதித்ய வர்மா ரிலீசாகாத நிலையில், எந்த படம் தான் ரிலீசாகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. மிக மிக அவசரம் மற்றும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படங்கள் நாளை ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளியை முன்னிட்டு வெளியான பிகில் மற்றும் கைதி படத்திற்கு திரையரங்குகளில் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதால், இந்த வார இறுதி நாட்களிலும், அந்த இரு படங்களும் கல்லா கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X