ரிலீசாக போகுது ஆதித்யா வர்மா பாடல்கள்… உச்சகட்ட சந்தோஷத்தில் துருவ் விக்ரம்!
சென்னை: சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அர்ஜுன் ரெட்டியின் ரீமேக் படமான ஆதித்யா வர்மா படம் மூலமாக தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார்.
கிரிசாயா இயக்கத்தில் உருவாகியுள்ள ஆதித்யா வர்மா படத்தின் பாடல்கள் எப்போது ரிலீசாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பால், உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கிறார் துருவ் விக்ரம்.

அர்ஜுன் ரெட்டி ரீமேக்
சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு அர்ஜுன் ரெட்டி படம் வெளியானது. விஜய் தேவர்கொண்டா, ஷாலினி பாண்டே நடித்திருந்த இந்த படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான ஆதித்யா வர்மா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.

மேக்கிங் சொதப்பல்
சேது படம் தனக்கு ஒரு பெரிய ஹிட் கொடுத்ததை போலவே பாலாவின் இயக்கத்தில் தனது மகனின் முதல் படமும் வெளியாகவேண்டும் என்று நினைத்தார் விக்ரம். அர்ஜுன் ரெட்டி படத்தை வர்மா எனும் தலைப்பில் இயக்குநர் பாலாவை ரீமேக் செய்ய வைத்தார்.
ஆனால், மேக்கிங்கில் ஏற்பட்ட சொதப்பல்கள் காரணமாக அந்த படம் அப்படியே டிராப் செய்யப்பட்டு புதிதாக ஆதித்யா வர்மா எனும் தலைப்பில் கிரிசாயா இயக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

பாடல்கள் வெளியீடு
இந்த ஆண்டின் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ஆதித்யா வர்மா திகழ்கிறது. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வரும் அக்டோபர் 22ம் தேதி வெளியிடப்போவதாக ஆதித்யா வர்மா படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எப்போது ரீலிஸ்?
கிரிசாயா இயக்கத்தில் உருவாகியுள்ள ஆதித்யா வர்மா திரைப்படம் அடுத்த மாதம் நவம்பர் 8ம் தேதி திரைக்கு வருகிறது. துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிடா சாந்து நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











