வெளியானது ஆதித்ய வர்மா டீஸர்: படத்தை மறுபடியும் எடுத்ததில் தப்பே இல்லை
சென்னை: ஆதித்ய வர்மா படத்தின் டீஸர் இன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தை த்ருவ் விக்ரமை வைத்து பாலா ரீமேக் செய்தார். படப்பிடிப்பு மொத்தமும் முடிந்த பிறகு படம் திருப்தியாக இல்லை என்று கூறி வேறு ஒரு இயக்குநரை வைத்து மீண்டும் எடுக்கப் போவதாக தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அர்ஜுன் ரெட்டி பட இயக்குநர் சந்தீப் வாங்காவிடம் உதவியாளராக இருந்த கிரிசாயா த்ருவ் விக்ரமை வைத்து அர்ஜுன் ரெட்டி படத்தை ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.
ஆதித்ய வர்மா
ஆதித்ய வர்மா படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது. த்ருவ் விக்ரம் தோரணையாக உள்ளார். நெருக்கமான காட்சிகள், லிப்லாக் காட்சியை காட்டியுள்ளபோதிலும் அது ஆபாசமாகத் தெரியவில்லை. டீஸர் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. ஆதித்ய வர்மா த்ருவுக்கு கை கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம் போன்று.
த்ருவ்
ஆதித்ய வர்மா டீஸரை பார்த்தவர்கள் பாலா ரீமேக் செய்த டீஸருடன் ஒப்படும்போது இது ஆபாசம் இல்லாமல் நன்றாக வந்துள்ளது. பக்கா மாஸாக உள்ளது. இது இதை தான் எதிர்பார்த்தோம். படத்தை மறுபடியும் எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் முடிவு செய்ததில் தவறு இல்லை என்பது டீஸரை பார்க்கும்போது புரிகிறது என்கிறார்கள் ரசிகர்கள்.
ரசிகர்கள்
டீஸரை பார்த்தவர்கள் த்ருவ் விக்ரம் நடிப்பில் தேறிவிட்டதாக கூறுகிறார்கள். மேலும் அர்ஜுன் ரெட்டியை விட இது சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறார்கள். டீஸரில் த்ருவை அல்ல மாறாக அவரின் தந்தை விக்ரமின் மாஸ் நடிப்பை பார்ப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கபிர் சிங்
அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் வாங்கா ரெட்டியே அந்த படத்தை இந்தியில் ஷாஹித் கபூரை வைத்து கபிர் சிங் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். கபிர் சிங் படத்தின் டீஸர், ட்ரெய்லர் வெறித்தனமாக உள்ளது. ஆதித்ய வர்மா படம் ரிலீஸானால் அதை அர்ஜுன் ரெட்டி மற்றும் கபிர் சிங்குடன் ஒப்பிட்டு பேச்சு கிளம்புவதை தடுக்க முடியாது. இருப்பினும் த்ருவின் கோலிவுட் பயணம் இனிதே துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











