சாதிப்பாரா த்ருவ் விக்ரம்.. 5 படங்களுடன் மோதும் ஆதித்ய வர்மா!
Recommended Video
சென்னை: சியான் விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம் அறிமுகமாகும் ஆதித்ய வர்மா, நாளை இந்தியாவில் ரிலீசாகிறது. இன்றே சில வெளிநாடுகளில் படம் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆதித்ய வர்மா படம் நாளை தமிழகத்தில் சோலோவாக ரிலீசாகவில்லை. ஆதித்ய வர்மாவுடன் சேர்த்து மொத்தம் 6 படங்கள் நாளை ரிலீசாகின்றன.
அர்ஜுன் ரெட்டி மற்றும் அதன் ஹிந்தி ரீமேக்கான கபீர் சிங் படங்கள் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டடித்த நிலையில், நாளை த்ருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள ஆதித்ய வர்மா எந்தளவுக்கு வெற்றியை பதிவு செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆதித்ய வர்மா
த்ருவ் விக்ரம், பனிடா சந்து, பிரியா ஆனந்த் நடிப்பில் கிரிசாயா இயக்கத்தில் உருவாகியுள்ள ஆதித்ய வர்மா படம் நாளை நவம்பர் 22ம் தேதி திரைக்கு வருகிறது. தெலுங்கில், விஜய தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி உள்ளது. சியான் விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம், கதாநாயகனாக இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். நடிகர் கார்த்தி த்ருவ் விக்ரமுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ஃப்ரோஸன் 2
டிஸ்னி தயாரிப்பில் பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் ஃப்ரோஸன் 2 திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்தியாவில், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் அந்த அந்த மாநில பிரபல நடிகைகளின் குரல் எல்சா மற்றும் ஆன்னா கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழில், ஷ்ருதி ஹாசன் மற்றும் திவ்ய தர்ஷினி குரல் கொடுத்துள்ளனர். ஆதித்ய வர்மாவுக்கு நாளை மிகப்பெரிய போட்டியாக ஃப்ரோஸன் 2 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கே.டி
மதுமிதா சுந்தரராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள சிறு பட்ஜெட் படம் கே.டி என்கிற கருப்புத்துறை படமும் நாளை வெளியாகிறது. யோக் ஜாப்பி, நாக விஷால், ராமசாமி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். தாத்தா மற்றும் சிறுவனுக்கு இடையே உருவாகும் பாசத்தை மையமாக வைத்து இந்த கேடி படம் உருவாகியுள்ளது.
மேகி
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் தயாரித்து இயக்கி இருக்கும் பேய் படம் மேகி. இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். அதில், பேஸ்புக் மூலம் நிம்மி என்னும் நாயகிக்கு வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் திரைப்படம் குறித்தும், திரைப்படம் வெளியாகுமா என்ற தனது சந்தேகம் குறித்தும் நிம்மி கொடுத்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலானது அந்த படமும் நாளை வெளியாகிறது. மேலும், பேய் வால புடிச்ச கதை மற்றும் பணம் காய்க்கும் மரம் போன்ற சிறு பட்ஜெட் படங்களும் நாளை வெளியாகின்றன.


Click it and Unblock the Notifications











