இங்க இல்லை.. துருவ் விக்ரம் முதல்ல எங்க அறிமுகம் ஆகப்போறாரு தெரியுமா?

சென்னை: தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் ரீமேக் செய்து அறிமுகமாக சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆசைப்பட்டார்.

பாலா இயக்கத்தில் வர்மாவாக உருவான அந்த படம், எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை என எழுந்த சர்ச்சைகளால் அப்படியே டிராப் செய்யப்பட்டு வீணடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கிரிசாயா இயக்கத்தில் துருவ் விக்ரம், பனிடா சந்து, பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஆதித்ய வர்மா இம்மாதம் 22ம் தேதி வெளியாகிறது.

தணிக்கை பிரச்சனை

தணிக்கை பிரச்சனை

ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி படத்திற்கு ஏற்பட்டதை போல துருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா படத்திற்கும் தணிக்கை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 8ம் தேதியே ஆதித்ய வர்மா வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி வரைக்கும் தணிக்கை குழு சான்று வழங்காத நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

ஓவர் டோஸ்

ஓவர் டோஸ்

பாலா இயக்கத்தில் உருவான வர்மா படம் சரியாக இல்லை என்ற குற்றச்சாட்டை தயாரிப்பு குழு முன் வைத்த நிலையில், தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்காவின் உதவி இயக்குநரான கிரிசாயாவை கொண்டு தமிழில் அந்த படத்தை தயாரிப்பு தரப்பு மீண்டும் முதலில் இருந்து உருவாக்கி உள்ளனர். தெலுங்கு படத்தின் வீர்யம் குறையக் கூடாது என்பதற்காக ஓவர் டோஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், தான் படத்திற்கு தணிக்கை சான்று கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.

அப்பான்னா இப்படி இருக்கணும்

அப்பான்னா இப்படி இருக்கணும்

மகனின் முதல் படம் சூப்பர் ஹிட் படமாக அமைய வேண்டும் என தந்தை விக்ரம் பல முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார். பல படங்களில் தான் பிசியாக நடித்து வந்தாலும், மகனை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த, அவருடன் இணைந்து பல புரமோஷன் நிகழ்ச்சிக்கும் விக்ரம் சென்று வருகிறார்.

ஒரு நாள் முன்னாடியே

தணிக்கை குழு ஆதித்ய வர்மா படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், இந்தியாவில் வரும் நவம்பர் 22ம் தேதி ஆதித்ய வர்மா வெளியாகிறது. ஆனால், இந்தியாவை தவிர உலகம் முழுவதும் இந்த படம் ஒரு நாள் முன்னாடியே நவம்பர் 21ம் தேதியே வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X