Don't Miss!
- Finance கோடக் மஹிந்திரா பங்குகள் 10 சதவீதம் சரிவு.. முதலீட்டாளர்கள் பெரும் சோகம்.. டார்கெட் விலை குறைந்தது!!
- News மெடிக்கல் ஷாப் போறீங்களா? இருமல் மருந்து வாங்கணுமா? இந்த 67 மருந்துகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அஜித் படத்தில் நடித்த 'அருவி' அதிதி பாலன்... வைரலாகும் போட்டோ!
Recommended Video
சென்னை : கடந்த வருடம் வெளியான படங்களில் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட படங்களில் 'அருவி' முக்கியமான இடத்தை பிடித்தது.
அதிதி பாலன் நாயகியாக நடிக்க அருண் புருஷோத்தமன் இயக்கி இருந்த இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அதிதி பாலன் ஏற்கெனவே அஜித்தின் 'என்னை அறிந்தால்' படத்தில் சிறிய ரோலில் நடித்திருக்கிறார்.
அருவி அதிதி பாலன்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரிலீஸாகி அனைவராலும் கொண்டாடப்பட்ட படம் 'அருவி'. இந்தப் படத்தில், அதிதி பாலன் ஹீரோயினாக நடித்திருந்தார். 500 பெண்கள் ஆடிஷன் செய்யப்பட்டு, அதில் தேர்வானவர் அதிதி. அவருடைய நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது.
அஜித் படத்தில் அதிதி
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் ஆகியோர் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் 'அருவி' ஹீரோயின் அதிதி பாலன் ஏற்கெனவே நடித்துள்ளார் என்ற ஆச்சரியமான விஷயம் தெரியவந்துள்ளது.
அதிதி பாலன்
அஜித் நடிப்பில் உருவான 'என்னை அறிந்தால்' படத்தில் த்ரிஷாவுக்கு தோழியாக சில காட்சிகளில் நடித்துள்ளார் 'அருவி' அதிதி பாலன். த்ரிஷாவுடன் பரதநாட்டியம் ஆடுபவர்களில் ஒருவராகவும் வருகிறார் அதிதி பாலன்.
வைரலாகும் புகைப்படம்
தற்போது 'என்னை அறிந்தால்' படத்தில் வரும் அதிதியின் புகைப்படம் வைரலாகி வருகிறது. அஜித் படத்தில் மிகச்சிறிய வேடத்தில் நடித்ததால் அதை அதிதி பாலன் பேட்டிகளில் குறிப்பிடாமல் தவிர்த்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.