ராதா கிருஷ்ணன் நகரை கண்டுக்கவே இல்லை.. காண்டான அருவி பட ஹீரோயின்.. காப்பாற்ற கோரிக்கை!

சென்னை: கடந்த 2 நாட்களாக மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் சிக்கித் தவிப்பதாகவும், அங்கே எந்தவொரு மீட்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அருவி பட ஹீரோயின் அதிதி பாலன் கொந்தளித்துள்ளார்.

சென்னையில் மிக்ஜம் புயல் தாக்கிய நிலையில், பல இடங்கள் வெள்ளக்காடாக மாறி உள்ளன. வேளச்சேரி, முடிச்சூர், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.

Aditi Balan complaints that no one takes care of Radhakrishnan Salai people are still in struggle

வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்புக் குழுவினர் மீட்டு வரும் நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலையில் எந்தவொரு மீட்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கீர்த்தி பாண்டியனை தொடர்ந்து அதிதி பாலனும் புகார் கூறியுள்ளார்.

முதலமைச்சர் கான்வாய்: தனது அம்மாவை அழைத்துக் கொண்டு வர சென்ற போது தனது காரை அங்கிருந்து அப்புறப்படுத்த அதிகாரிகள் வலியுறுத்தினர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கான்வாய் வருகிறது என தனது கஷ்டத்தை பதிவிட்ட நடிகை அதிதி பாலன் தொடர்ந்து தங்கள் பகுதியில் எந்தவொரு மீட்பு நடவடிக்கையும் வெள்ளத்தை வடிய வைக்க வேலைகளும் நடக்கவில்லை என குற்றம்சாட்டி உள்ளார்.

அருவி ஹீரோயின்: நடிகை அதிதி பாலன் அருவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்னர் குட்டி ஸ்டோரி, கோல்ட் கேஸ் என ஓடிடி படங்களில் நடித்து வந்தார். கருமேகங்கள் கலைகின்றன எனும் படத்தில் சமீபத்தில் நடித்திருந்தார். சமந்தாவின் சாகுந்தலம் படத்தில் சைடு ரோலில் நடித்திருந்தார். தற்போது மயிலாப்பூரில் வசித்து வருகிறார்.

ராதாகிருஷ்ணன் சாலையை கண்டுக்கல: இந்நிலையில், மழை விட்டு பல மணி நேரங்கள் ஆகியும் இன்னமும் ராதாகிருஷ்ணன் சாலையை சென்னை கார்ப்பரேஷன் ஏன் கண்டுக்கல என்றும் இன்னமும் பல மக்கள் இங்கே சிக்கித் தவித்து வருகின்றனர். உடனடியாக யாராவது வந்து உதவுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X