என்னால தாங்க முடியல: அதிதி 'அருவி' பாலன்
சென்னை: அருவி புகழ் அதிதி பாலனால் சந்தோஷத்தை தாங்க முடியவில்லையாம்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து வரும் நயன்தாராவே நடிக்க மறுத்த படம் அருவி. சமந்தா, ஸ்ருதி ஹாஸன் என்று பெரிய ஹீரோயின்கள் நடிக்க மறுக்க அருண் பிரபு தன்னை போன்றே புதுமுகமான அதிதி பாலனை தேர்வு செய்து அருவி படத்தை எடுத்தார்.
பெரிய தலைகள் இல்லாமல் ஹிட்டானது தான் அருவியின் சாதனை.

வாழ்த்து
திரையுலகில் எந்த நல்ல படைப்பு வந்தாலும் அதை பாராட்ட தவறாதவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் ஒரு வார்த்தை சூப்பர் கண்ணா என்று கூறினால் படைப்பாளிகள் குஷியாகிவிடுவார்கள். இது ரஜினிக்கும் தெரியும்.

பாராட்டு
அருவி படத்தை பார்த்த ரஜினிகாந்த் அருண் பிரபுவை அழைத்து மனதார பாராட்டியுள்ளார். இந்த இளம் வயதில் இயக்குனர் என்னும் பெரிய பொறுப்பை கையில் எடுத்த அருண் பிரபுவுக்கு இந்த பாராட்டு மேலும் ஊக்கம் அளித்துள்ளது.
மகிழ்ச்சி
சூப்பர் ஸ்டார் பாராட்டியதால் மகிழ்ச்சியை தாங்க முடியவில்லை என்று அதிதி அருவி பாலன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பிரமாண்டம்
ஷங்கர் ஒரு படத்தை பாராட்டுகிறார் என்று அந்த படத்திற்கு அது பெரிய பிளஸ். அருவி படத்திற்கு அந்த பிளஸ் கிடைத்துள்ளது. பலரின் வாழ்த்துக்களை பெற்றுள்ள அருண் பிரபு மேலும் பல வெற்றிகள் பெற நாமும் வாழ்த்துவோம்.


Click it and Unblock the Notifications











