15 நிமிஷத்துக்கு மேல முடியல.. விஜய்யோட அந்த படம் பார்த்து தியேட்டரிலேயே தூங்கிட்டேன் - அதிதி பாலன்!
சென்னை: நடிகை அதிதி பாலன் நடிகர் விஜய்யின் படத்தை பார்த்து ஆர்ப்பாட்டம் செய்துக் கொண்டிருந்தேன். ஆனால், 15 நிமிடத்திற்கு மேல் அப்படியே அமைதியாகி தூங்கி விட்டேன் என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பது விஜய் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.
அருவி படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் அதிதி பாலன். 33 வயதாகும் இவர் சினிமாவில் தொடர்ந்து ஹீரோயின் கதாபாத்திரங்கள் வராத நிலையில், துணை நடிகையாக பல படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் நடித்து வரும் இவர் சமந்தாவின் சாகுந்தலம் மற்றும் நானியின் சரிபோதா சனிவாரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்திலும் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வின்டேஜ் விஜய் பிடிக்கும்: நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை நான் எனக்கூறியுள்ள அதிதி பாலன் வின்டேஜ் விஜய் தனக்கு ரொம்பவே பிடிக்கும் எனக் கூறினார். காதலுக்கு மரியாதை, ஷாஜகான் படங்களை எல்லாம் அப்படி ரசித்துப் பார்த்துள்ளேன். விஜய் படங்களிலேயே ரொம்ப பிடித்தப் படம் என்றால் அது ஆல் டைம் ஃபேவரைட் கில்லி படம் தான் என்றார்.
பீஸ்ட் படத்துக்கு செம ஆட்டம்: பாண்டிச்சேரியில் 20 நண்பர்களுடன் கேங்காக தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்துக்கு சென்றிருந்தோம். அந்த கேங்கில் 4 பேர் தமிழர்கள். முதல் 15 நிமிடங்கள் பீஸ்ட் படத்தை பார்த்து ஒவ்வொரு காட்சிக்கும் செம ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தோம். மற்றவர்கள் எல்லாம் எங்களை ஒருமாதிரியாக பார்க்கும் அளவுக்கு ஆட்டம் போட்டோம்.

அப்புறம் தூங்கிட்டேன்: ஆனால், 15 நிமிஷத்துக்கு மேல் படம் போன போக்கை பார்த்து நாங்கள் அப்படியே சைலன்ட் ஆகி தூங்கிட்டோம். நான் தூங்கியதை எல்லாம் என்னுடைய நண்பர்கள் வீடியோ எடுத்து வெறுப்பேற்றினார்கள் என நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தை பார்த்து தூங்கினேன் என அதிதி பாலன் வெளிப்படையாக யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
கடுப்பான விஜய் ரசிகர்கள்: நடிகை அதிதி பாலன் விஜய்யின் பீஸ்ட் படத்தை பார்த்து தூங்கிட்டேன் என பேட்டியளித்துள்ள நிலையில், அவரை பற்றி தப்பு தப்பாக கமெண்ட்டுகளை பதிவிட்டும் ட்ரோல் செய்தும் வருகின்றனர். ஒரு நடிகையாக இருந்துக் கொண்டு இன்னொரு நடிகர் படம் குறித்து இப்படி பேசலாமா என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











