அருவி ஹீரோயினா இது? சின்ன வயசுலயே என்னவொரு ஸ்டைல்.. அதிதி பாலனை பார்த்து வாய் பிளக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: அருவி படத்தின் மூலம் பலரையும் அலறவிட்ட நடிகை அதிதி பாலனின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் நடித்து வருகிறார் அதிதி பாலன்.
சமீபத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து குட்டி ஸ்டோரி ஆந்தாலஜியில் ஆடலும் பாடலும் கதையில் நடித்து அசத்தி இருந்தார்.

அஜித் படத்தில் அறிமுகம்
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் தல அஜித், திரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில், திரிஷாவின் தோழி கதாபாத்திரத்தில் பாடல் காட்சி ஒன்றில் நடித்திருப்பார் அதிதி பாலன். அதன் பிறகு வெளியான அருவி படத்தில் லீடு ரோலில் நடித்து பலரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

வேற லெவல் நடிப்பு
முன்னணி நடிகைகளுக்கே சவால் விடும் அளவுக்கு இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியான அருவி படத்தில் செம போல்டாக நடித்து இருந்தார் அதிதி பாலன். அருவி படத்தில் நடித்த அதிதி பாலனுக்கு ஏகப்பட்ட விருதுகளும், பாராட்டுக்களும் குவிந்தன. தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

விஜய்சேதுபதிக்கு பளார்
காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியான ஆந்தாலஜி திரைப்படமான குட்டி ஸ்டோரியில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதியின் மனைவியாக ஆடலும் பாடலும் கதையில் நடித்திருந்தார் அதிதி பாலன். வேற ஒரு பெண் பேசுவது போல பேசி கணவரை வசமாக சிக்க வைத்து அறையும் காட்சி பாராட்டுக்களை அள்ளியது.

நவரசா
சூர்யா, விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரேவதி, பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா என நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் நெட்பிளிக்ஸின் நவரசா ஆந்தாலஜியில் ஒரு கதையில் அதிதி பாலனும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குநர் வசந்த் அந்த கதையை இயக்க உள்ளார்.

சின்ன வயசுலயே ஸ்டைல்
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தை பருவத்தில் எடுத்த சில போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை அதிதி பாலன் தற்போது பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். அப்பவே மாடல் அழகி போல செம ஸ்டைலாக போஸ் கொடுத்துருக்கீங்களே என அதிதி பாலனிடம் ஏகப்பட்ட ரசிகர்கள் ஹார்ட்டீன் போட்டு கேட்டுள்ளனர்.

டயார்ட் ஆகிட்டேன்
திலிப் ராம் எனும் உறவினரை டேக் செய்த அதிதி பாலன், இந்த போட்டோ எடுக்கும் போது நாம ரொம்ப டயார்ட் ஆகிட்டோம்னு நினைக்கிறேன் என கேப்ஷன் போட்டு இன்னொரு குழந்தைப் பருவ போட்டோவையும் ஷேர் செய்து ரசிகர்களை கொஞ்ச வைத்துள்ளார் அதிதி பாலன். மலையாளத்தில் படவேட்டு, கோல்ட் கேஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











