பிகினியில் மணிரத்னம் நாயகி... ஆங்கில மேகஸின் அட்டைப்பட போட்டோ!
மும்பை : கார்த்தி நடிப்பில், மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் இந்தி நடிகை அதிதி ராவ் ஹைதாரி. இந்தப் படம் தோல்வியைத் தழுவியதால் தமிழில் வேறு படங்கள் இவருக்கு அமையவில்லை. தற்போது 'பத்மாவதி' படத்தில் நடித்து ரிலீஸுக்கு காத்திருக்கிறார்.
பல பஞ்சாயத்துகளால் ரிலீஸ் தாமதமாகும் 'பத்மாவதி' படத்தை முடித்த கையோடு தெலுங்கில் சுதீர் பாபு நடிக்கும் ரொமான்டிக் படத்தில் நடிக்கிறார். 'அவுர் தேவதாஸ்' எனும் இந்தி படத்திலும் நடித்து வருகிறார் அதிதி ராவ்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிக்கைக்காக நடந்த போட்டோ ஷூட்டில் நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார் அதிதி. தற்போது அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
'ப்ரஜாபதி' எனும் மலையாளப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான தொடர்ச்சியாக பல வருடங்கள் பாலிவுட்டில் மட்டுமே வலம் வந்தார். 'காற்று வெளியிடை' படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவிற்கு மீண்டும் வர முயற்சித்ததும் சறுக்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











