Aditi Rao: சித்தார்த் எங்கே? காஸ்ட்யூம் டிசைனருடன் குத்தாட்டம் போட்ட அதிதி ராவ்.. ரசிகர்கள் ட்ரோல்!

சென்னை: நடிகை அதிதி ராவ் தனி அறையில் காஸ்ட்யூம் டிசைனருடன் குத்தாட்டம் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், அந்த வீடியோவுக்கு லைக்குகளும் ட்ரோல் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

2006ல் மலையாளத்தில் வெளியான பிரஜாபதி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அதிதி ராவ் ஹைதாரி. அடுத்த ஆண்டே தமிழில் சிருங்காரம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆனால், மணிரத்னம் இயக்கத்தில், 2017ல் கார்த்திக்கு ஜோடியாக காற்று வெளியிடை படத்தில் நடித்ததன் மூலம் தான் கோலிவுட்டில் பிரபலமானார் அதிதி ராவ்.

சித்தார்த் உடன் காதல்: காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம், சைக்கோ மற்றும் ஹே சினாமிகா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள அதிதி ராவ் நடிகர் சித்தார்த் உடன் கடந்த 2021ல் மகா சமுத்திரம் எனும் தெலுங்கு படத்தில் இணைந்து நடித்திருந்தார்.

அந்த படத்துக்கு பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அடிக்கடி இருவரும் ஒன்றாக டேட்டிங் செல்லும் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி உள்ளன.

மேலும், நடிகை அதிதி ராவ் உடன் சித்தார்த் நடனம் ஆடிய வீடியோவையும், அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஜூப்ளி சுமித்ரா குமாரி: நடிகை அதிதி ராவ் இந்த ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். வித விதமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு ரெட் கார்ப்பெட்டை அலங்கரித்தார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அதிதி ராவ் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான ஜூப்ளி வெப்சீரிஸில் சுமித்ரா குமாரியாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார்.

Aditi Rao Hydari dance with costume designer and netizens asks where is Siddharth?

ராய் டாக்கீஸ் ஸ்டூடியோ ஓனரான சித்தார்த் ராயின் மனைவியும் நடிகை சுமித்ரா குமாரியுமாக நடித்திருந்த அதிதி ராவ் நடிகர் மதன் குமாராக அறிமுகமாக முதலில் தேர்வு செய்யப்படும் ஜம்ஷத் கான் உடன் காதல் கொண்டு அவருடன் கராச்சிக்கு ஓடிப் போக ரெடியாகும் காட்சிகளில் நடித்திருந்தார்.

கணவருக்கு துரோகம் செய்து விட்டு, கணவரின் கம்பெனிக்கு எதிரான வேலைகளை பார்ப்பதும், தனது காதலர் ஜம்ஷத் கான் கொலைக்கு பழி வாங்கவும் துடிக்கும் காட்சிகளில் செம ஸ்கோர் செய்திருப்பார்.

காஸ்ட்யூம் டிசைனருடன் குத்தாட்டம்: இந்நிலையில், காஸ்ட்யூம் டிசைனர் திவ்யக் டிசோஸா என்பவருடன் ரூமில் குத்தாட்டம் போட்ட வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதிதி ராவ்.

Aditi Rao Hydari dance with costume designer and netizens asks where is Siddharth?

எமோஜிக்களுக்கு ஏற்றவாறு இருவரும் நடனமாடும் அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அதிதி ராவின் நடனம் அட்டகாசம் என ரசிகர்கள் பாராட்டி கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

சித்தார்த் எங்கே: நடிகை அதிதி ராவ் மற்றும் சித்தார்த் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், சித்தார்த் உடன் ஆட்டம் போடாமல் காஸ்ட்யூம் டிசைனருடன் அதிதி ஆட்டம் போட்டிருப்பதை பார்த்த நெட்டிசன்கள் சித்தார்த் எங்கே என கமெண்ட் போட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், வழக்கமாக அதிதி ராவ் எந்தவொரு போஸ்ட் போட்டாலும் முதல் நபராக சித்தார்த் வந்து கமெண்ட் போட்டு வரும் நிலையில், இந்த நடன வீடியோவுக்கு அவர் லைக் மற்றும் கமெண்ட் போடவில்லையே ஏன் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X