தமிழ், தெலுங்கில் உருவாகும் படம்.. நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறாராமே அந்த பிரபல ஹீரோயின்!

By

சென்னை: மகா சமுத்திரம் படத்தில், நடிகை அதிதி ராவ் ஹைதாரி நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படம் மூலம் தமிழுக்கு வந்தவர், அதிதி ராவ்.

அதில் கார்த்தி ஜோடியாக நடித்திருந்தார். அடுத்தும் மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்தார்.

உதயநிதி காதலி

உதயநிதி காதலி

பின்னர் மிஷ்கினின் சைக்கோ படத்தில் உதயநிதியின் காதலியாக நடித்து மிரட்டி இருந்தார். இப்போது ஹே சினாமிகா, மஹா சமுத்திரம் படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தில் கமிட் ஆகியிருந்தார். பிறகு கால்ஷீட் பிரச்னை காரணமாக அதில் இருந்து விலகினார்.

தெலுங்கு ஜபர்தஸ்த்

தெலுங்கு ஜபர்தஸ்த்

இவர் நடிக்கும் மஹா சமுத்திரம் படத்தில் சித்தார்த், சர்வானந்த் ஹீரோக்களாக நடிக்கின்றனர். தெலுங்கு படங்களிலும் ஹீரோவாக நடித்து வந்த சித்தார்த், கடைசியாக 2013 ஆம் ஆண்டு வெளியான ஜபர்தஸ்த் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.

பாயல் ராஜ்புத்

பாயல் ராஜ்புத்

அதற்கு பிறகு தமிழில் கவனம் செலுத்திய அவர், மற்ற மொழி படங்களில் நடிக்கவில்லை. ஏழு வருடங்களுக்குப் பின், சித்தார்த் நடிக்கும் நேரடி தெலுங்குப் படம் இது. தெலுங்கில் கார்த்திகேயா, பாயல் ராஜ்புத் நடித்த ஆர்.எக்ஸ்.100 படத்தின் இயக்குநர் அஜய் பூபதி இயக்குகிறார்.

காதல் ஆக்‌ஷன்

காதல் ஆக்‌ஷன்

படத்தை ஏ.கே என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தமிழ், தெலுங்கில் இதை தயாரிக்கிறது. காதல் கலந்த ஆக்‌ஷன் கதையாக உருவாகும் இந்தப் படத்தில் அதிதி ராவ் கேரக்டர் நெகட்டிவ் ஷேட் கொண்டது என்று கூறப்படுகிறது. கிட்டதட்ட வில்லி கேரக்டர் போன்றது என்கிறார்கள். அதனால்தான் முதலில் இதில் நடிக்க இருந்த சாய் பல்லவி விலகியதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X