என்ன இப்படி உட்கார்ந்திருக்கீங்க.. செட்டே ஆகலை.. அதிதி ராவை அலற வைத்த ரசிகர்!
சென்னை : வெண்ணையில் செய்த பன்ணு போல இருப்பவர் அதிதி ராவ். பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் அழகு என அனைத்து அம்சங்களும் கச்சிதமாக பொருந்தியவர்
ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட இவர், 2007ம் ஆண்டு தமிழில் வெளிவந்த "சிருங்காரம்" என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் தேவதாசி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
முதல் படத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்ததால், அனைவரும் இவரை வியந்து பாராட்டினர்.

காற்று வெளியிடை
10 வருடம் கழித்து தமிழ் திரைத்துறையில் மீண்டும் காலடி எடுத்து வைத்த அதிதி ராவ். இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' படத்தில் டாக்டர் லீலா ஆபிரகாம் என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்திருந்தார். கார்த்திக்கும் இவருக்குமான காதல் காட்சிகள் உண்மையில் காதலின் உச்சம் தொட்டதாக இருக்கும்.

மீண்டும் மணிரத்னம் படத்தில்
மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் பல முன்னணி நடிகர்களான சிம்பு, அரவிந்த் சாமி, அருண்விஜய், விஜய் சேதுபதியுடன் அதிதி நடித்தார். இப்படத்தில் செய்தியாளராகவும் மேலும் அரவிந்த்சாமியின் பெண் தோழியாகவும் எதார்த்த நடிப்பையும் சற்று கிளாமரையும் கூட்டி நடித்திருப்பார் அதிதி ராவ்.

நல்ல பெயர்
மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். சைக்கோ கொலைகாரனிடம் சிக்கிக்கொள்ளும் ஒரு பெண்ணாக நடித்திருப்பார். இப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தன. பாடல்களும் வெற்றி பெற்றன.

அதிதி காட்டில் மழை
மணிரத்னம் இயக்கும் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும், துக்ளக் தர்பார், ஹே சினாமிகா ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இப்படத்தில் அதிதி ராவுடன் துல்கர் சல்மான் , காஜல் அகர்வால் ஆகியோரும் நடிக்கின்றனர்.

செட் ஆகல
கவர்ச்சியில் தாராளம் காட்டும் இவர், அடக்கம் ஒடுக்கமான பெண்போல குத்தவைத்து அமர்ந்து கொண்டு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அதிதி இது உங்களுக்கு கொஞ்சம் கூட செட் ஆகல என்று கூறி கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











