“கோட்டையில் கல்யாணம்.. அடுத்து பீச்சில் ஓடணும்”.. 2வது திருமணம் குறித்து கனவு காணும் பிரபல நடிகை!
Recommended Video
சென்னை: தனது திருமணம் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது குறித்து நடிகை அதிதி ராவ் ஹைதிரி ஒரு பெரிய கனவே கண்டு வருகிறார்.
மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதரி. அந்த படத்தை அடுத்து மணிரத்னத்தின் செக்கக் சிவந்த வானம் படத்தில் நடித்தார்.
தற்போது விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள சைக்கோ படத்தில் அதிதி தான் ஹீரோயின். தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் பிஸியான நடிகையாக இருக்கிறார்.

திருமணக் கனவு
இந்நிலையில் அதிதி ராவ் ஒரு பேட்டியில் தனது திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்பது குறித்து வெளிப்படுத்தியுள்ளார். கடற்கரை ஓரத்தில் அமைந்திருக்கும் ஒரு ராஜா காலத்து கோட்டையில் தான் அதிதியின் திருமணம் நடைபெறுமாம். திருமணம் முடிந்த கையோடு, மாப்பிள்ளையின் கையைப்பிடித்துக்கொண்டு கடற்கரையில் ஓடுவாராம்.

குதிரையில் வரும் ராஜகுமாரன்
இதுகுறித்து அதிதிராவ் மேலும் கூறுகையில், "திருமண விஷயத்தில் பெண்களுக்கு, இறக்கை இருக்கிற குதிரையில் ராஜகுமாரன் வர வேண்டும். ராஜகுமாரி போல் இருக்கும் தன்னை ஒரே கையால் தூக்கி குதிரையில் உட்கார வைத்து அழைத்து செல்ல வேண்டும் என்றெல்லாம் ஆசைகள் இருக்கும் என்று அந்த காலத்து ராஜா ராணி கதைகளில் சொல்வது உண்டு.

கோட்டையில் திருமணம்
எனக்கும் சிறுவயதில் இதுபோன்று ராஜகுமாரன் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. எனது அம்மா திருமணம் நடந்தபோது மேக்கப் இல்லாமல் எளிமையாக இருந்தார். நானும் அப்படியே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனது திருமணம் ராஜாக்கள் காலத்து மிகப்பெரிய கோட்டையில் நடக்க வேண்டும்.

பீச் ஓரத்தில்..
அந்த கோட்டை 'பீச்' ஓரத்தில் இருக்க வேண்டும். திருமணம் முடிந்ததும் பீச்சில் ஓடவேண்டும், நடனம் ஆடவேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது", என தெரிவித்துள்ளார்.

விவாகரத்து ஆனவர்
அதிதி ராவின் இந்த ஆசைகள் எல்லாம் அவரது முதல் திருமணத்தில் கைகூடவில்லை. ஆமாங்க அதிதி ஏற்கனவே திருமணமானவர். மத்திய அரசின் வருவாய் துறையில் அதிகாரியாக உள்ள சத்யதீப் மிஸ்ரா என்பவருடன் அதிதிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது.

இரண்டாவது திருமணம்
ஆனால் அந்த திருமணம் தோல்வியில் முடிந்ததால், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கணவரை பிரிந்துவிட்டதாக அதிதியே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். எனவே அதிதியின் இந்த திருமண கனவு எல்லாம், தனது இரண்டாவது மணமாலைக்காக தான். அதிதியின் கனவு நனவாக நாமும் வாழ்த்துவோம்.


Click it and Unblock the Notifications











