வயித்துல பட்டாம்பூச்சி பறக்குது, நன்றி ஜி.வி. பிரகாஷ்: 'சைகோ' நடிகை
Recommended Video

சென்னை: தனது வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பதாக நடிகை அதிதி ராவ் ஹைதரி தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகையான அதிதி ராவ் ஹைதரி மணிரத்னத்தின் காற்று வெளியிடை படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்த அவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக சைகோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அவர் புது அவதாரம் எடுத்துள்ளார்.

ஜெயில்
வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து ஹீரோவாக நடித்துள்ள படம் ஜெயில். இந்த படத்தில் அதிதி ராவ் ஹைதரி, ஜி.வி.யுடன் சேர்ந்து ஒரு பாடல் பாடியுள்ளார். இதன் மூலம் அதிதி பாடகி அவதாரம் எடுத்துள்ளார். நடிகைகள் பாடல் பாடுவது புதிது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
காத்தோடு
அதிதியுடன் சேர்ந்து பாடலை பாடும் முன்பு அது குறித்து ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டார் ஜி.வி. பிரகாஷ் குமார்.
அதிதி
பாடலை பாடி முடித்த பிறகு அதிதி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, முதல் தமிழ் பாடலை பாடியுள்ளேன். வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்த ஜி.வி. பிரகாஷுக்கு நன்றி. உங்களுக்கும், வசந்தபாலன் சாருக்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
பாராட்டு
அதிதியின் ட்வீட்டை பார்த்த ஜி.வி. பிரகாஷ் அவர் செமயாக பாடியதாக தெரிவித்தார். அதை பார்த்த அதிதி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











