எங்களுக்கு டும் டும் டும் இங்கதான் நடக்குது.. எல்லாரும் வாங்க.. ஜோடியாக அறிவித்த சித்து - அதிதி!

ஹைதராபாத்: சினிமாவில் இருந்து கொண்டு தனக்கான துணையை சினிமாவிலேயே அமைத்துக் கொள்ளும் நடிகர்களைப் பார்க்கும்போது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட குஷியும், ஏக்கச்சக்க தகவல்களும் கிடைத்துவிடுகின்றது. அந்த வகையில் நடிகர் சித்தார்த் நடிகை அதிதி ராவ் ஹைதாரிக்கு திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது. இவர்கள் இருவரும் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இந்த ஆண்டில் நெருங்கிய சொந்தத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றிக் கொண்டனர். இவர்களது நிச்சயதார்த்தம்தான் சத்தமில்லாமல் நடந்து விட்டது கல்யாணம் எப்படி நடக்கும் என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வந்தனர். இந்நிலையில் இந்த கேள்விக்கு இருவரும் பதில் அளித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதன் பின்னர் சங்கரின் பாய்ஸ் படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். தனது ஆரம்ப கால சினிமாவில் அதிகப்படியான காதல் படங்களில் நடித்து வந்த சித்தார்த் தொடர்ந்து பல தோல்விகளையும் சந்தித்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் ஒரு லவ்வர் பாயாகவே வலம் வந்தார். ஹிந்தியிலும் எண்ட்ரி கொடுத்தார். சிவப்பு மஞ்சள் பச்சை, சித்தா போன்ற சீரியசான படங்களில் நடித்து தமிழில் ஒரு சீரியஸான கதாநாயகனாக தன்னை உருவாக்க முயற்சி செய்து வருகின்றார்.

aditi rao hydari siddharth siddharth aditi rao wedding

படம்: சித்தார்த் எப்படி மணிரத்னத்தின் இயக்கத்தில் அறிமுகமானாரோ, அதேபோல், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் அதிதி ராவ் ஹைதாரி. அதைத் தொடர்ந்து குறிப்பிட்ட சில கதைகளைத் தேர்வு செய்து, தமிழில் நடித்து வருகின்றார். சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைதாரியும் இணைந்து மஹா சமுத்திரம் படத்தில் நடித்தனர். இந்தப் படத்தில் நடித்த போது இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம், நட்பில் இருந்து காதலாக மாறியது.

aditi rao hydari siddharth siddharth aditi rao wedding

காதல்: இவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் காதல் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. ஆனால் இருவரும் இந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் இருந்தனர். இதனால் ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் காதல் என உறுதிபடுத்திக் கொண்டனர். இந்நிலையில்தான் இருவருக்கும் இந்த ஆண்டு தொடக்கத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

aditi rao hydari siddharth siddharth aditi rao wedding

பேட்டி: இருவரது திருமணமும் எப்போது நடக்கும் என்பது குறித்து தொடர்ந்து ரசிகர்களும் செய்தியாளர்களும் கேட்டுக்கொண்டே இருந்தனர். இது தொடர்பாக வாய் திறக்காமல் இருந்தவர்கள். தற்போது ஒன்றாக செய்தியாளர்களைச் சந்தித்து, திருமணம் தொடர்பான தகவலைக் கூறியுள்ளனர்.
அதிதி ராவ் ஹைதாரியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், அந்தக் காலத்தில் ஹைதராபாத் மாநிலத்தின் பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். இவர்களது குடும்பம் வனர்பதி ராஜ வம்சத்தைச் சேர்ந்த குடும்பம். இதனால் இவர்களது திருமணம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட, வனர்பதி கோவிலில் நடக்கும் என தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை திருமணம் எப்போது நடக்கும் என்ற தேதியை குறிப்பிடவில்லை.

aditi rao hydari siddharth siddharth aditi rao wedding

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X